Home Infertility தம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 16

தம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 16

651
0
SHARE

தன் மீது நமக்கு அதிக ஆர்வம் இருக்கிறதோ , எதனால் நமக்கு அதிக மகிழ்ச்சியும் , நிறைவும் கிடைக்கிறதோ , எது கிடைக்காத போது நமக்கு அதிருப்தியும் ,எரிச்சலும் கோபமும் வருகிறதோ
அது தான் முக்கியமான உணர்வு பூர்வ தேவையாகும்.

இது எது என்பதை முதலில் அடையாளம் காண்பதற்கு வாழ்க்கையில் நீங்கள் அதிகமாக விரும்பும் எல்லாவற்றையும் பட்டியலிடுங்கள். எது மிகவும் பிடித்தமானதோ அதை முதலில் தேர்வு செய்து உங்கள் துணைவர் அறியுமாறு கூறுங்கள்.

எதற்காக இப்படி செய்ய வேண்டும் ?

உங்கள் துணைவர் மீதுள்ள காதலை இழக்கும் போது , அவர் தனது உணர்வு தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாதவாறும் பார்த்து கொள்வீர்கள் . இது அனைவருக்கும் உள்ள இயல்பு . தனக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைக்க கூடாது என்று நினைப்பது சகஜம் .

நீங்கள் ஒரு விஷயத்தில் காயப்பட்டு இருக்கும் நிலையில் உங்கள் துணைவரின் உணர்வு
தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று செயல்படுவது மேலும் உங்கள் உணர்வுகளை
காயப்படுத்துமே தவிர இன்பத்தை தராது அல்லவா ?

ஆகவே , உங்கள் உணர்வு தேவையை முதலில் வரையறை செய்து கொள்ளுங்கள் . இந்த தேவையை நிறைவேற்றுவதற்கு உங்கள் துணைவர் ஆதரவாக செயல்படாவிட்டாலும், ஒருவரை ஒருவர் பாதுகாக்கும் விதத்தை அறிந்து கொண்டால் வேறுவித வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளலாம் .ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள இது உதவியாக இருக்கும் .

திருமணத்திலும் சரி, வாழ்க்கையிலும் சரி, இலக்கை அடைய எதுவெல்லாம் முக்கியம் என்பதை பட்டியலிட்டு கொள்ள வேண்டும் . உங்கள் நோக்கம் உங்களவர் உங்கள் மீது அன்பாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தால் , அவரை எது மகிழ்ச்சி படுத்துகிறதோ அதன் மீது கவனம் செலுத்துங்கள்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here