Home Common Health Problems ஆரோக்கியம் காக்கும் அஞ்சறைப் பெட்டி;

    ஆரோக்கியம் காக்கும் அஞ்சறைப் பெட்டி;

    421
    0
    SHARE

     நமது வாழ்வோடு இனைந்தே நம்முடன் பயணிப்பதில் அஞ்சறைப்பெட்டிக்கு  முதல் இடம்தான். நமது வீட்டில் நமது முன்னோர்கள் வழக்கப்படுத்தி வைத்ததுதான் அஞ்சறைப்பெட்டி. இது நமது ஆரோக்கியம் காக்கும் பெட்டகமாக உள்ளது.

    நம் சமையலின் சுவைக்கு மட்டுமே பயன்படாமல்  உடலின் ஆரோக்கியத்தை காக்கும் திறன் கொண்டது.

    அதன் பாரம்பரியம் அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் பார்க்கலாம். இந்த அஞ்சறைப் பெட்டியானது  தமிழர்களின் வரலாறுடன் இணைந்தே இருக்கிறது.

    இதில் இருக்கக்கூடிய பொருட்கள் என்றுப் பார்த்தால் சீரகம்,சோம்பு,மிளகு, மஞ்சல், வெந்தயம், கடுகு, தனியா, பெருங்காயம், பட்டை, கிராம்பு, ஆகிய மூலப் பொருட்கள் அடங்கியது இந்த அஞ்சறைப்பட்டி ஆகும்.

    இதில் இருக்க கூடிய பயன்கள் என்ன?

    சீரகம்:  சீரகத்தில் வைட்டமின் -பி இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துகள் இருக்கின்றன. இதன் பன்புகள் வயிற்றில் இருக்கும் வாயுக்களை அகற்றுவதில் பங்கு வகிக்கிறது. உடலின் சூட்டைத்தனித்து குளிர்ச்சியடையச் செய்கிறது.

    பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகம் என்பது சீரகத்தைப் போன்று இருந்தாலும் இதன் தன்மையானது முற்றிலும் வேறுபட்டது. வைட்டமின் பி-6, காப்பர், பீட்டா கரோட்டீன் ஆகிய உட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.செரிமானத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

    மிளகு: வைட்டமின்- பி, ஈ மற்றும் பைப்பரின் ஆகிய சத்துக்களைக் கொண்டது ஆகும். நமது உடலில் இருக்கக்கூடிய உருப்புகளை சமநிலையில் வைப்பதற்கு உதவுகிறது. இது பசியைத் தூண்டக்கூடியது.

    மஞ்சள்: Curcumin  ஆல்கலாய்டு என்னும் மூலப்பொருள் மஞ்சளில் இருக்கிறது. இதில் ஆண்டி ஆக்ஸ்டண்ட், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளது. வைரஸுக்கு எதிரானது. நோய் எதிர்ப்பு சக்தியாக செயல் படுகிறது.

    வெந்தயம்:  இதில் இரும்புசத்துக்கள், மற்றும் ஹீமோகுளோபின் அளவைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும்’ இது ரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது.
    முளைகட்டிய வெந்தயம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. நமது உடல் சூட்டைத் தணிக்கிறது. சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாகும்.

    கடுகு: நாம் சமைக்கும் போது தாளிப்பதற்கு முக்கியப் பொருளாக உள்ளது. இதனால் உடலில் இருக்கக்கூடிய நச்சுகள் குறைவதற்கு உதவுகிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைசெய்கிறது. குடல் சம்பந்தமான நோயிலிருந்து பாதுகாக்கிறது.

    கொத்தமல்லி:   தனியா பித்தத்தைக் குறைப்பதில் முக்கிய பொருளாக இருக்கிறது. கல்லீரல் செயல் பாட்டுக்கு துணைசெய்கிறது. வாந்தி,மயக்கத்தின் போது இதன் குடிநீர் குறைக்கிறது.

    பெருங்காயம்:  மூட்டுகளின் இடையில் இருக்கும் வாயுக்களை வெளியேற்றுவதில் உதவுகிறது. மேலும் இது நரம்புகளைப் பலப்படுத்துகிறது சுவாசப்பிரச்னையில் இருந்து குழந்தைகளைப் பாதுக்காக்கிறது.
    லவங்கப்பட்டை:  இதில் Cinnamic acid அதிக அளவில் இருப்பதால் Tannin உடலில் உள்ள கெட்ட கொழுப்பான LDL எனப்படும் கொழுப்பை அகற்றுகிறது. இதயப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறாது. காய்ச்சல் போன்ற நோய்பாதிப்பால் ஏற்படக்கூடிய உடல் சோர்வை தனிக்கிறது.

    நாம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை பின்பற்றினாலே  நமது வாழ்நாளில் நோயில்ருந்து முடிந்தவரை பாதுகாத்துக் கொள்ளலாம்.

    டாக்டர்-ஜெயராணி காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here