Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 22

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 22

446
0
SHARE

தான் வைத்ததுதான் சட்டம் என நடந்து கொள்பவர்களை பார்த்திருப்பீர்கள் . இவ்வாறு நடந்துகொள்ளும் போக்கை ” தான் தோன்றித்தனம்” என்பார்கள் . இந்த அநாகரீகமான நடத்தையை இரண்டு விதமாக பிரிக்கலாம். முன்யோசனையில்லாமல் செய்கிற விஷயங்களை எரிச்சல் தரும் பழக்ககங்கள் என்போம் . திட்டமிட்டு பிறரை எரிச்சலடைய வைக்கும் நோக்கில் செய்ய படுபவை எதேச்சதிகார நடத்தை என்பது .

துணைவரின் உணர்வுகளை மதியாமல் , அவரை ஒரு பொருட்டாக நினைக்காமல் தன்னிசையாக செயல்படும் போக்குதான் ஏதேச்சதிகாரமான நடத்தை என்பது . நாம் தான் எல்லா வற்றிலும் மேலானவர் , எல்லாருமே நமக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற ரீதியில் நடந்து கொள்வது . நீங்கள் கலந்து கொள்ளும் விளையாட்டு, நிகழ்ச்சிகள் , உடற்பயிற்சி அல்லது காதலிப்பது போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும் .

கூடுமானவரை கிடைத்த நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டும். ஒருவர் மற்றவரை எரிச்சலூட்டும் போது சரி பரவாயில்லை என்று விட்டுவிட வேண்டும் . பிரச்சினையை சமூகமாக
தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற போது அந்த பிரச்சினையை அத்துடன் விட்டுவிட வேண்டும் .

எரிச்சலூட்டுகிற பழக்கம் எதேச்சதிகாரப்போக்கு எதுவாக இருந்தாலும் அதை உங்களிடமிருந்து விரட்டும் திட்டத்தை வகுத்து கொள்ள வேண்டும் . நீங்கள் இருவரும் ஏற்று கொள்ள கூடிய திட்டமாக அது இல்லாவிட்டால் உங்களிடம் உள்ள அன்பை அது முறித்து விடும்.

நீங்களும் உங்கள் துணைவரும் உங்கள் பழக்கங்களையும் செயல்களையும் மாற்றினால் இருவருமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒருவர் இல்லாவிட்டால் ஒருவர் இல்லை என்ற
நிலையை உண்டாக்க உங்களுக்குள் எரிச்சல் தரும் பழக்கங்கள் இருந்தால் மாற்றி கொள்ளுங்கள்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here