Home Common Health Problems முடி கொட்டுவது ஏன் ஏற்படுகிறது?

    முடி கொட்டுவது ஏன் ஏற்படுகிறது?

    132
    0
    SHARE

    முடி கொட்டுதல் என்பது ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் ஏற்படுகிறது. வழுக்கை என்பது பெரும்பாலும் பரம்பரையாக வருவதுண்டு.

    இந்த நவீன வாழ்க்கை முறைமாற்றத்தால் முடியின் அடர்த்தி குறைந்து வருகின்றன. தினமும் குறிப்பிட்ட அளவு முடி கொட்டி வளர்வது இயல்பான ஒன்றுதான்.

    இந்த பிரச்னை உண்டாவதற்கு முதல் காரணம் நமது மனநலம் தான் ஆம்!

    நமது வாழ்க்கை முறையில் அதிகரித்து வரும் மன அழுத்தமானது உடல் நலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றது. உடல் ஆரோக்கியமும் மன அழுத்தமும் சேர்ந்து கொள்ளுவதால் தோலை அதிகம் பாதிப்படையச் செய்கிறது. இதன் பாதிப்பானது முடி அதிகமாக கொட்ட தொடங்குகிறது.

    தினமும் ஏற்படக்கூடிய மனதுக்கு பிடிக்காத சூழ்நிலைகள் மனதிலும்,உடலிலும் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்த அழுத்தமானது உடலில் இருக்க கூடிய ஹார்மோன்களில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

    வேலையின் காரணமாக, செல்போன், சமூக வலைதளம், ஏதேதோ பிரச்னைகளால் சரியாகத் தூங்க முடியாத  நிலை, ஏற்படுவதால் இந்த முடிகொட்டுதல் ஏற்படுகிறது. இதை நீங்களே பசோதித்துப் பார்க்கலாம். தூங்காத இரவுகளில் அடுத்த நாள் முடி அதிமாக கொட்டுவதை பார்க்க முடியும்.

    இந்த பிரச்னையை ஆரம்பத்தில் கண்டுகொண்டு மருத்துவரைப் பார்க்க வேண்டும். அவர் கூறுவது போல் முடிக்கு ஏற்ப ஷாம்புகளை பயண்படுத்துவது, போதுமான உறக்கம், வேலைக் கேற்ற ஓய்வு, இரும்பு சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

    விளபரங்களில் பார்ப்பதை பயன்படுத்துவது உங்கள் பிரச்னையை மேலும் அதிகரிக்கும்.

    தலையில் அழுக்கு, தூசி, மற்றும் பொடுகுத்தொல்லை அதிகம் இருந்தாலும் முடி உதிர்வு இருக்கும். இதற்கான தீர்வு என்று பார்த்தால்’ மருந்துகள் இருக்கின்றன. உங்கள் மருத்துவரை ஆலோசனை செய்தபின் அவர் பரிந்துரைக்கும் மருந்துகள், ஷாம்பு, ஊட்டசத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

    உடலில் ஏற்படக்கூடிய ஹார்மோன் கோளாறுகள் இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை என்பது இயல்பானதுதான். இருந்தும் சில மருந்துகளும் இதற்கு காரணமாகிறது.

    முடி உதிர்தல் என்பது உடலுக்குப் போதுமான வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் கிடைக்காத நிலையில் ஏற்படும்.

    முடிக்குத் தேவையான உயிர்ச்சத்து அதிக முடைய பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உழைப்புக்கு ஏற்ற ஓய்வு, மற்றும் எட்டுமணி நேர தூக்கம் போன்றவை முடிக்கு  மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

    போதுமான இரும்புச்சத்து  இல்லாமல் இருப்பது முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தேவையான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

    பேரீச்சம்பழம்,அசைவ உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    இந்த சத்துகள்  உடலில் சேர்வதற்கு உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது இடவேளி வேண்டும். காபி,தேநீர்  போன்றவற்றைத் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி அவசியம் தேவை. இது இரும்புச்சத்து உடலில் கிரகிக்க  தேவைப்படுகிறது.

    மன அழுத்தம் ஏற்படாதவாறும், இரும்பு சத்து குறையாமலும் இருநதால் முடி உதிர்வது தடுக்கப்படும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

    டாக்டர்- கே. எஸ் ஜெயராணி காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here