Home Infertility ​தம்பதியர்களின் ஆலோசனைகள் -பாகம் 31

​தம்பதியர்களின் ஆலோசனைகள் -பாகம் 31

326
0
SHARE
Beautiful pregnant woman posing while lying on a bed at home

திருமணத்தை  பொறுத்தவரையில்  கரிசனமே  உணர்வு  பூர்வமான  தேவைகளை  சந்திக்கிற  மிக முக்கிய  விஷயமாகும் . இருவரையும்  சந்தோஷமாக , திருப்திகரமாக  வைத்து  கொள்ளும்  செயலை  அக்கறையோடு  செய்வதுதான்  கரிசனம் . இதில் , எந்த  விஷயத்தில்  அவர்கள்  மிக திருப்தியடைகிறார்களோ  அதுதான்  அவர்களது  உணர்வுபூர்வமான  தேவை.

நான்  சந்தித்த  பலர்  கீழுள்ளவற்றில்  ஏதேனும்  பத்து  விஷயங்களை  ஒரே  மாதிரியாக  கூறி , இவையெல்லாம்  முக்கியம்  என்பார்கள் . அவை :

பாராட்டுதல் , அன்பு  காட்டுதல் , பேசுதல் , வீடு விசயங்களை  உதவி  செய்தல் , குடும்ப பொறுப்பு, பொருளாதார  உதவி , நேர்மை , வெளிப்படையாக  இருத்தல் , உடல் கவர்ச்சியாக  இருத்தல் , பொழுதுபோக்கு  தோழமை , மற்றும்  திருப்தியான  பாலுறவு .

தம்பதியர் இருவரும்  தத்தம்  உணர்வு  பூர்வமான  தேவையை  ஏன்  பூர்த்தி  செய்து கொள்ள  இயலவில்லை  என்றால் , மேற்சொன்ன  பத்து  விஷயங்களும்  ஆணுக்கும் , பெண்ணுக்கும் , தரவாரியாக  வித்தியாச  படுவதால்தான். உணர்வுபூர்வமான  பத்து  தேவைகளில்  ஆண்களுக்கு  முக்கியமாக  படுகிற  ஐந்து தேவைகள்  பெண்களுக்கு  மிகவும்  சாதாரணமாக  இருக்கும் . இப்படித்தான்  ஆண்களுக்கு  சாதாரணமாக தெரிகிற  பத்து  பெண்களுக்கு  முக்கியமானதாக  தோன்றும்.

கணவனும்  மனைவியும்  தங்கள்  தேவைகளை  சந்தித்து  கொள்வதில்  நிறைய  கஷ்டங்கள் இருக்கிறது.அவர்கள் ஒருவர்  கோணத்திலிருந்து  இன்னொருவர்  பார்ப்பது  குறைவு . ஒருவர்  எதை  அதிகமாக  புகழ்கிறாரோ  அவரது  துணைவர்  மிக  குறைவாகவே  அதை  பற்றி  பேசுவார் . உனக்கு  என்ன  செய்ய  பட  வேண்டும்  என எதிர்பார்க்கிறாயோ  அதை  மற்றவர்களுக்கு  செய் . என்றொரு  பழமொழி  சொல்வார்கள் . தேவைகள்  ஒரே  மாதிரியானது  அல்ல என்பதால்  அவர்களுடைய  முயற்சிகளும்  பாராட்டை  பெறுவதில்லை

 

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here