Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 89

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 89

289
0
SHARE

பரிசோதனைகள்

ரத்த அழுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாற்பது வயதுக்கு மேல் அனைவரும் அவசியம் முழு உடற்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இரத்தப் பரிசோதனையில் முக்கியமாக சர்க்கரை, உப்பு, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ், யூரிக் அமிலம் மற்றும் கொழுப்பின் துணைப் பொருள்களான அதிக அடர்த்திக் கொழுப்பு, குறை அடர்த்திக் கொழுப்பு, மிகக் குறைந்த அடர்த்திக் கொழுப்பு ஆகியவை பரிசோதிக்கப்பட்ட வேண்டும்.

இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை, இரத்த வெள்ளணுக்கள் மற்றும் அவற்றின் வகைகளின் எண்ணிக்கை இரத்த செல் தட்டுகளின் எண்ணிக்கை ஹீமோகுளோபின் முதலியவை பார்க்கப்பட வேண்டும். சிறுநீரின் எல்லாவகைச் சோதனைகளையும் செய்ய வேண்டும்.

மார்பு எக்ஸ்-ரே படம் எடுத்து நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளையும் கவனமாகப் பரிசோதிக்கவேண்டும். அல்ட்ரா சவுண்ட் உதவியோடு நுரையீரலில் ஏதேனும் குறைகள் தென்படுகின்றனவா என்பதையும், ஆஞ்சியோ கிராபி மூலம் இரத்த நாளச் சுருக்கம் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும்.

கண் பரிசோதனையை முழுவதுமாகச் செய்யவேண்டும். முக்கியமாக விழித்திரையைப் பரிசோதித்து அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆராய வேண்டும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here