Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 32

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 32

127
0
SHARE

ருவரும் சேர்ந்து நடக்கும்போது பின்தங்குவோரை கைதூக்கி இழுத்துவிட்டு சென்றால் இருவருமே சுலபமாக இலக்கை அடையலாம் . பிரிதல் நிலையிலிருந்து நெருக்கமான நிலைக்கு வருவதற்கு புத்தியுடன் செயல்பட வேண்டும் . நடக்கும்போது ஒருவரை ஒருவர் கை தூக்கி விடலாம் . ஆனால் அவருடைய எடையை அவர்தான் தூக்கி செல்ல வேண்டும் .

புத்தி கூர்மையை பயன்படுத்தி முன்யோசனையுள்ள தீர்மானத்தை எடுத்து ஒருவரின் தேவையை இன்னொருவர் நிறைவேற்றும் போது , இப்போது என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை பற்றி கவலைப்படாமல் மன உணர்வுகளை மீறி சாதுர்யமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் .

இது பிரிந்துபோவதை விரைந்து தடுப்பதோடு , கருத்து வேறுபாடுகளை களைந்து நெருக்கத்தை உண்டாக்கிக், நீண்ட காலம் தம்பதியர் நெருக்கமாக வாழவும் உதவுகிறது. கருத்து வேறுபாடும் , விலகி செல்ல நினைக்கும் போக்கும் இருக்கும்போது புத்தி கூர்மை உபயோகமாக இருப்பதை போலவே நெருக்கமான நிலைகளிலும் இருக்கும் .

எப்போது ஒருவர் நெருக்கமான நிலையிலிருந்து வெளியேறுகிறார் என்பதை நினைத்து பாருங்கள் . உங்களில் இருக்கும் கொடுப்பவர் நேர்த்தியாக பேரம் பேசாத போதுதானே கொடுப்பவர் எல்லாவற்றையும் தியாகம் செய்வதன் மூலம் தோல்வியை மட்டுமே உங்களுக்கு தருகிறார் . ஆகவே , நீங்கள் மிகவும் நெருக்கமான நிலையில் இருந்தாலும்கூட நல்ல முறையில் பேரம் பேசுபவராக இருக்க வேண்டும் .

கொடுப்பவரும், பெறுபவரும் உங்களுக்கு சிறந்த ஆலோசகர்கள் தாம். ஆனால் அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விடாதீர்கள் . பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உங்கள் புத்தி கூர்மையை பயன்படுத்த வேண்டும் . உணர்ச்சிகளையல்ல.

திருமண உறவில் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும் , புத்திக்கூர்மையை பயன்படுத்துவதற்கும்,
அதை பின்பற்றுவதற்கும் உங்களுக்கு சில விதிமுறைகளை கூற போகிறேன். இந்த புதிய விதிகள் உத்தரவாதமான பலனை தரும்.

கொடு அல்லது பெறு என உங்களுடைய உள்ளுணர்வு சொல்லும்போது பேரம் பேசுவதற்கு உதவியாக இருக்கக்கூடிய இந்த விதிகளை பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையில் வரும் திருமண பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முடியும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here