Home Common Health Problems விபத்துகளின் போது ஏற்படும் உள் இரத்தக் கசிவைக் கண்டுகொள்வது எப்படி?

    விபத்துகளின் போது ஏற்படும் உள் இரத்தக் கசிவைக் கண்டுகொள்வது எப்படி?

    224
    0
    SHARE

    சில விபத்துகளில் காயம் ஏற்படும் போதோ, மோதி கீழே விழும்போதோ சில காயங்களில் ஏற்படும் உல் இரத்தக் கசிவுகளை நாம் உடனடியாக அறிந்துகொள்ள முடியாது.

    இதற்கான அறிகுறிகள்

    காது மற்றும் மூக்கிலிருந்து இரத்தக் கசிவுகள், இருமும் போது அல்லது வாந்தியில் இரத்தம் வெளிவருதல், பிறப்புறுப்புகள் மற்றும் ஆசனவாயில் இரத்தம் கசிதல்

    கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சிராய்ப்புக் காயங்கள்

    கபாலம், மார்பு மற்றும் வயிற்றில் ஊடுருவிச் செல்லும் காயங்கள்

    வயிற்றில் தொடு வலி ஏற்படுவதுடன் வயிற்றுத் தசைகள் இறுகிக் காணப்படுதல்

    எலும்பு முறிவுகள்

    உள் இரத்தக் கசிவு அதிர்ச்சிச் செயலிழைப்பை ஏற்படுத்தும். இரத்தத்தின் கொள்ளளவு குறைந்து இரத்த ஓட்டம் குறைந்து கொண்டே போகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் பதட்டத்துடன் காணப்படுவார்கள். அதிகமாக தாகம் ஏற்படும். அவர்களுடைய தோல் சுருங்கி குளிர்ந்து காணப்படும்.

    லேசாக மேலெழும்பும் சுவாசம், விரைவான ஆனால் தளர்ந்த நாடி, கை நடுக்கம் போன்றவற்றுடன் அமைதி இழந்து காணப்படுவார்கள்.

    பாதிக்கப்பட்டவரை நிற்கவோ அல்லது உட்காரவோ வைத்தால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு நினைவிழப்பார்கள். ஆனால் படுக்க வைத்தால் நினைவு திரும்பும்.

    எனவே ஒருவருக்கு உள் இரத்தக்கசிவு இருப்பதாகச் சந்தேகப்பட்டால் உடன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்ப்பது மட்டுமே அவர்கள் உயிருக்கு நல்லது.

    அவர்களை அமைதியாகவும், வசதியாகவும் படுக்க வைக்கவும்.

    ஆனால் பருகவோ உண்ணவோ எதையும் கொடுக்காதீர்கள்.

    வயிறு, தலை, மார்பு போன்ற பாகங்களில் ஏற்படும் உள் இரத்தக் கசிவுகளில் உயிருக்கு ஆபத்தான நிலைகூட ஏற்படலாம். வெளியே இரத்த இழப்பிற்கான எவ்வித அறிகுறியும் இல்லாவிடினும் கடும் இரத்த இழப்பிற்கு உள்ளாகி இருப்பார்கள்.


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here