Home Infertility குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்

குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகள்

440
0
SHARE

இனப்பெருக்க உறுப்புகள்

முதல் சந்திப்பு

விந்தணு எப்படி முட்டையை சந்திக்கிறது, இந்த சந்திப்பு எங்கு நிகழ்கிறது?

ருத்தரிப்பு நிகழ்ந்து கரு எவ்வாறு பதியமாகிறது என்பனவற்றைக் கூறுவதற்காக ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும், அவற்றில் உருவாகும் விந்தணு மற்றும் முட்டையைப் பற்றியும் கூறவேண்டியிருந்தது.

இனி விந்தணுவும், முட்டையும் எப்படி முதன்முதலாக சந்தித்துக் கொண்டன? அதன் பிறகு என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி கூறப்போகிறோம்.

ஒரு பெண்ணுக்குள்ளோ அல்லது ஓர் ஆணுக்குள்ளோ முட்டையும், விந்தணுக்களும் சேர்ந்து இருந்தால் அவை தாங்கள் விரும்பும் போது சந்தித்துக்கொள்ள இயலும். ஆனால் முட்டையைப் பெண்ணுக்குள்ளும், உயிரணுவை ஆணுக்குள்ளும் அல்லவா அமைந்திருக்கிறது.

அதன் விளைவாகத்தான் முட்டையைப் பார்க்க உயிரணுவும், உயிரணுவைப் பார்க்காமல் முட்டையும் காத்திருந்து, ஏமாற்றத்துடன் இறந்து அழிந்து போகின்றன. இவ்வாறு அழிந்துபோகும் இவையிரண்டிலும் பெண்ணுக்குள் இருக்கும்
முட்டையின் அழிவுதான் பெண்ணுக்குப் பிரச்னையாகிறது. அதாவது மாத விலக்காக வெளிப்படுகிறது.

மாதவிலக்கு

இனப்பெருக்க உறுப்புக்கள் அடுத்தக்கட்டமாக தாய்மை நிலையை ஏற்கத் தயார் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதுதான் மாதவிலக்கு. ஒவ்வொரு மாதமும் முட்டை கருவுற்று வருமென எதிர்பார்த்து, அதற்கு இடமளிப்பதற்காகக் கருப்பைத் தன்னைத் தயார் செய்துகொள்வதும் அவ்வாறு முட்டை கருவுறாது போகும்போது இருபத்தெட்டாம் நாளில் அதையும், அதனோடு சேர்ந்து உருவான பிற பொருட்களையும் வெளியேற்றிக் கருப்பையைச் சுத்தப்படுத்துவதும் மாத விலக்காகும்.

மாதவிலக்கு என்பது பிறப்புறுப்பு வழியாக உதிரத்துடன் கருப்பையிலிருந்து வெளியாகும் கழிவுகளை நீக்குவதாகும்.

இது ஒரு பெண் கருவுற்றிருந்தால் ஒழிய ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்ச்சியாகும். அந்நாட்களில் மற்றவற்றினின்றி விலகியிருந்ததால் மாத விலக்கம் என்று தொன்று தொட்டு
சொல்லப்படுகிறது.

மாதவிலக்கு பதினொன்று முதல் பதிமூன்று வயதில் ஆரம்பித்து, இறுதியாக மாதவிலக்கு முடிவடையும் காலம் வரை தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

ஒவ்வொரு மாதப்போக்கு சுழற்சியின் இடைவெளி 21 முதல் 40 நாட்களுக்குள் வருகிறது. 15 சதவிகிதத்தினருக்கும் குறைவான பெண்களுக்கு மட்டும் சரியான
சுழற்சி காலமான 28 நாட்களுக்கு ஒரு முறை மாத விலக்கு ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு 23 முதல் 34 நாட்களுக்கு ஒரு முறை மாதப்போக்கு வெளியாகிறது.

ஒவ்வொரு முறையும் நல்ல உடல் நலமுள்ள பெண்ணுக்கு ஏறக்குறைய 80 மில்லி லிட்டர் இரத்தம் ஐந்து அல்லது ஏழு நாட்களுக்குள் வெளியாகிறது. மாதவிலக்கின் ஆரம்பத்தில் இரத்தப்போக்கு அதிகமாகவும், முடிகிற நாளில்
குறைவாகவும் காணப்படுகிறது.

மாதவிலக்குச் சுழற்சியை
* கருவணுக்கூடு தூண்டப்படும் காலம்
* முட்டை வெளிப்படும் காலம்
* கருத்தரிப்பை ஒழுங்குபடுத்தும் காலம்
என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here