Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 33

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 33

327
0
SHARE

திருமண உறவில் உங்கள் இருவரின் விருப்பமும் ஒரு சேர நிறைவேற்றப்பட வேண்டும் . யாரேனும் ஒருவர் மற்றவரின் நலனுக்காக பாதிக்கப்பட கூடாது. அடுத்தவரின் துயரத்தில் இன்னொருவர் இன்பம் காண்பது தவறு . நீங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக இருக்கும்போது இத்தகைய நிலை ஏற்படுவதை அனுமதிக்க மாட்டீர்கள். அதற்கு என்ன செய்யலாம் என்பதற்கான வழியே இந்த புதிய விதி . அதற்கு கூட்டு ஒப்பந்த கொள்கை என்று பெயர் .

உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இடையே உற்சாகமான ஒப்பந்தம் இல்லாமல் எதையும் செய்யாதீர்கள் . என்று வலியுறுத்துவதுதான் அந்த புதிய விதி. இந்த புதிய விதியை கவனமாக பரிசீலித்தால் , இதில் இரண்டு வேறுபாடான எதிர்செயல்கள் அடங்கியிருப்பதை பார்க்கலாம்.

நீங்கள் இருவரும் இதை பின்பற்றும்போது , நீங்கள் எதை செய்தாலும் அதற்கு உங்கள் துணைவரின் உற்சாகமான ஒப்புதல் தேவை என்பதால் உங்களில் இருக்கிற கொடுப்பவர் அதை விரும்புவார். இவ்வாறே உங்கள் துணைவர் எதை செய்தாலும் அதற்கு உங்களுடைய உற்சாகமான ஒப்புதல் தேவை என்பதால் உங்களில் இருக்கிற கொடுப்பவரால் தன்னிசையாக எதுவும் நடைபெறாது . எனவே , இது நமக்கு நன்மை தரும் என்று பெறுபவரும் இதை விரும்புவார்.

ஒப்பந்தம் இல்லாமலும் ஒப்புதல் இல்லாமலும் எதையும் செய்ய முடியாத நிலையில் கொடுப்பராலும் , பெறுபவராலும் சுதந்திரமாக செயல்பட முடியாது . இந்த விதியை தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் பாதிப்பில் மற்றவருக்கு நிறைவு கிடைக்காது . அடுத்தவரை காயப்படுத்தி நீங்கள் சந்தோஷமாக இருக்கவும் முடியாது.

பிடிக்காத ஒரு விஷயத்தில் அக்கறை காட்டாவிட்டாலும் இருவருமே ஒவ்வொருவரின் உணர்வுகளை மதிக்கிறவர்களாக , அவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறவர்களாக மாற உதவுவதுதான் கூட்டு ஒப்பந்த கொள்கையின் நோக்கம் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here