Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 34

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 34

311
0
SHARE
48978728 - portrait of in love young couple in town

ந்த ஒன்றையும் செய்யும் முன் துணைவரின் உற்சாகமான ஒப்புதல் தேவை என்பதால், அவரிடம் நான் செய்ய இருப்பது பற்றி நீ என்ன நினைக்கிறாய் என கேளா வேண்டியுள்ளது. இந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலை வைத்தே உங்களுடைய அடுத்த கட்ட செயல்பாடு இருக்கும் . இந்த கேள்வியின் மூலம் அவருடைய உணர்வை வெளிப்படுத்த நீங்கள் ஒரு வாய்ப்பை அவருக்கு தருகிறீர்கள் .

நீங்கள் முன்யோசனையில்லாமல் உங்கள் விருப்பப்படி ஒரு செயலில் ஈடுபடும் மனநிலையில் இருந்தாலும், கூட்டு ஒப்பந்த கொள்கையை பின்பற்றும் நிலையில் உங்கள் விருப்பம் அவரது விருப்பமின்றி நிறைவேறாது.

இதற்கு காரணம் என்ன ? நீங்கள் இருவரும் தனி நபர்களல்ல. ஒரு அணி ஒரே நேரத்தில் இருவருக்கும் நலன் தரக்கூடிய இலக்கை அடைவதற்காக இணைந்து செயல்படுகிறீர்கள் என்பதுதான்.

அடுத்தவரை வருத்தப்படுத்தி அதன் மூலம் கிடைக்கிற ஆதாயத்தை நாம் ஏன் முக்கியமாக நினைக்கவேண்டும் ? என்று என்ன தோன்றும் . பலர் இவ்வாறு நினைக்காமல் போவதால் தான் திருமணத்தில் பிரச்சினைகள் தோன்றுகின்றன .

யோசனையில்லாமல் இதுவரை கடைபிடித்து வந்த பழக்கத்தையும் , நடத்தைகளையும் தயாராக இல்லாத போது , இந்த ஒப்பந்தமானது எரிகிற தீயில் எண்ணெய் விடுவதை போல தெரியும்.

முன்யோசனையற்ற பழக்கங்களுக்கு பதிலாக , ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை காட்டுக்கிற இந்த கொள்கையை நடைமுறை படுத்தி பழகி கொண்டால் , அதை பின்பற்றுவது மிகவும் சுலபமாக இருக்கும் . இதன் மூலம் ஒற்றுமையும் உறவும் பலப்படும் . இதை வாழ்க்கை முறையாக்கி கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் , பிறர் பாராட்டும் விதத்திலும் இருக்கும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here