Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 35

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 35

187
0
SHARE

சுயமாக முடிவெடுக்கும் நிலையை கூட்டு ஒப்பந்த கொள்கை தடை செய்வதால், ஒவ்வொரு தீர்மானம் எடுத்து செயல்படுத்தும் முன்னும் நீங்கள் இருவரும் கலந்து பேச வேண்டிய நிலை ஏற்படும். இந்த முடிவை பற்றி என்ன நினைகிறாய் என்று துணைவரிடம் கேட்கும்போது அவர் அதற்கு உற்சாகமாக ஒப்புக்கொண்டால் அதை தொடரலாம் . இல்லாவிட்டால் அதற்கு மாற்றுவழியைத்தான் யோசிக்க வேண்டியிருக்கும். அந்த இடத்தில் தான் பேரம் ஆரம்பிக்கிறது.

இதை பழக்கப்படுத்தி கொண்டால் உங்கள் ஒப்பந்தப்படி பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பலன் தரக்கூடிய வழிகளில் உங்கள் தேவைகளை பெற்று கொள்வதில் நிபுணர்களாகி விடுவீர்கள் . இதை நடைமுறை படுத்தி வந்தால் , நேர்த்தியான பேரம் என்பது உங்கள் வாழ்க்கை முறையாக மாறும் .

உற்சாகமான ஒப்புதல் என்ற இலக்கோடு செல்லும்போது உங்களின் பெறுபவரின் தீய தந்திரங்களும் , முன் யோசனையற்ற செயல்களும் கைவிடப்படும் . ஒருவரின் நலனுக்காக மற்றவருக்கு பாதிப்பை உணடாக்குகிற நிர்ப்பந்தம் என்ற பேசுச்சுக்கே இடமில்லாமல் போகிறது. இதே நிலைதான் அடுத்தவரை நிந்தனை செய்யும்போதும், பிறர் மீது எரிச்சலைடையும் போதும் உண்டாகிறது.

கூட்டு ஒப்பந்த கொள்கை நடைமுறையில் இருக்கும் போது காதலுக்கு எதிரிகளான இந்த பழக்கங்கள் எதையும் செய்ய முடியாது . இந்த பழக்கங்களுக்கு பதிலாக நீங்கள் வேண்டுகோள் வைப்பதையும், கருத்துகளை கூறுவதையும் , துணைவரின் கருத்துக்கு மதிப்பளிப்பதையும் ஏற்படுத்தி கொள்ளும்போது காதல் எதிரிகள் செயலிழந்து போகின்றன .

இருவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த ஒப்பந்தத்திற்கு உங்களில் இருக்கும் பெறுபவர்தான் அனுமதி அளிக்கிறார் . அவர்தான் உங்களின் பரஸ்பர ஆர்வத்தை எதிர்பார்க்கிறார் . அவ்வாறு இல்லாமல் அதில் ஒருவர் வேறு சிறந்த மாற்று வழிகளை யோசிக்கலாம் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here