Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 36

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 36

217
0
SHARE

நீங்கள் இருவரும் ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது அந்த விஷயம் ஒருவருக்கு பிடிக்காததாகவோ அல்லது ஒருவரை பாதிப்பதாகவோ இருந்து , கருத்து வேறுபாடு காரணமாக அதை பற்றிய உடன்பாட்டுக்கு வரவில்லை என்றால் , அதை தீர்ப்பதற்கு மூன்று விதமான வழிகளை பின்பற்றுவீர்கள்.

1. உங்களுடைய சுய உணர்வை தவிர்த்து , உங்களுடைய துணைவரின் வழியில் அதை செய்வீர்கள் .
2. உங்களுடைய துணைவரின் உணர்வை கருத்தில் கொள்ளாமல் உங்கள் வழியில் அதை செய்வீர்கள் .
3.அந்த பிரச்சினையை ஒட்டுமொத்தமாக கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவீர்கள்.

பேரம் என்பது இதிலிருந்து மாறுப்பட்டது . ஒரே நேரத்தில் உங்கள் இருவரின் உணர்வுகளையும் ஒரு சேர கவனத்தில் கொள்வது மிக முக்கியமான நோக்கங்களை நிறைவேற்ற பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

பேரம் பேச ஆரம்பிக்கும் முன்பு , நீங்கள் விரும்புகிற செயல்களை திரும்ப செய்யவும் , விரும்பாதவற்றை தவிர்க்கவும் , நீங்கள் இருவரும் விரும்பி அனுபவிக்கக்கூடிய வகையில் சில அடிப்படை விதிகளை உருவாக்கி கொள்ள வேண்டும் . கருத்து வேற்றுமை தோன்றும் போதெல்லாம் நீங்கள் பேரம் பேசுவது இனிமையான அனுபவமாக இருந்தால் தான், அது உங்கள் திருமண வாழ்க்கையில் எப்போதும் தொடரும் . இத்தகைய இனிமையான பாதுகாப்பான பேரம் பேசும் சூழல் உருவாவதற்கு மூன்று விதமான விதிகள் உள்ளன . இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here