Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 37

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 37

271
0
SHARE

ம்பதியர் ஒருவர் மீது மற்றவர் காட்டுகிற அக்கறையை வெளிப்படுத்தும் காதல் கேரிங் லவ் என்று சொல்லலாம் . இதை வைத்து துணைவரை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதற்கு உங்களால் என்னவெல்லாம் செய்ய இயலும் என்பதை அறியலாம் .

இந்த வகையான காதல் கணவன் மீதோ அல்லது மனைவி மீதோ மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை . பல்வேறு உறவுமுறைகளிலும் இருக்கிறது . பிள்ளைகள் மீது காட்டும் அன்பு , வீட்டு விலங்குகள் மீது காட்டும் அன்பு , நண்பர்களின் மீது காட்டும் அக்கறை , தெரிந்தவர்கள் அல்லது அந்நியர் ஆகியோரின் மீது அக்கறை காட்டி அவர்களுக்காக நேரத்தை செலவிடும் பண்பைகூட கேரிங் லவ் என்று சொல்லலாம் .

உங்கள் துணைவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறீர்கள் ? அவர் வாழ்க்கை தரம் உயர்வதற்காக என்னவெல்லம் செய்ய முயன்றிருக்கிறீர்கள் ? என்பன போன்ற கேள்விகளை வைத்தே துணைவர் மீதுள்ள அன்பை , அக்கறையை தெரிந்து கொள்ள இயலும் .

இத்தகைய காதல் இயல்பானது என்பதால் இது அவ்வளவு முக்கியமாக தெரியாது . உங்களது மணவாழ்வின் இன்பமும் , வெற்றியும் எவ்வாறு இருக்கும் என்பதை எடுத்து காட்டாது .

அவருக்கு பிடித்தமானவராக அக்கறையுள்ளவராக இருப்பதாக காட்டி கொள்ளாமல், அவர் மீது ஆழமான காதலுள்ளவராக வெளிப்படுத்தினால் உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும் . அது அவரை மகிழ்ச்சியடைய செய்வதோடு , உங்கள் திருமண உறவையும் சுவையுள்ளதாக்கும். உங்கள் துணைவரின் உணர்வு பொறிகளை தட்டுவதாக உங்களுடைய அக்கறை கலந்த காதல் அமைந்து விட்டால் , அது அவருக்கு ரொமாண்டிக் உணர்வை தூண்டி உங்கள் மீது மாறாத காதல் கொண்டவராக மாற்றிவிடும் .

நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டாத நிலையில் , மற்றவருக்கு மகிழ்ச்சியை தரும் செயலில் ஈடுபாடாத வரையில் , உங்களுக்கு காதல் உணர்வு தூண்டப்படும் என்று சொல்வது சரியாக இருக்காது . அக்கறையான காதல் இருக்க வேண்டும்தான் , ஆனால் , மணவாழ்க்கையை பாதுகாப்பதற்கு ரொமாண்டிக் காதல்தான் அவசியமாகும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here