Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 39

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 39

249
0
SHARE
48978728 - portrait of in love young couple in town

ல்ல மன நிலையில் உள்ளபோது விவாதத்தை ஆரம்பிப்பது சுலபம் . ஆனால் , பேரம் அவ்வப்போது சூடுபிடிக்கும் என்பதால் , அவ்வப்போது ஏற்படும் உணர்ச்சியின் எதிர்மாறான வெளிப்பாடுகளை சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் . நீங்கள் சொல்லுகிற ஏதொ ஒன்று அவருக்கு பிடிக்காததாக இருக்கலாம் . ஆகவே, விவாதத்தை தொடர விரும்பாமல் இதுவே போதும் , இதற்கு மேல் பேச விருப்பமில்லை என அவர் கூறுவதாக வைத்து கொள்ளுங்கள் என்ன செய்வீர்கள் .?

என்னிடம் ஆலோசனைக்கு வரும் நபர்களிடம் இதை பற்றி பேசும்போது , உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை துணைவர் கூறும்போதும், பேரத்தை தொடர வேண்டாம் என அவர் தடுக்கும்போதும் எப்போதும் சாதகமாகவும் , உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்லித்தருவேன். இதை எதிர் கொள்ள தயாராகிவிட்டால் பிரச்சினை பெரிதாகாது .

ஒருவருக்கொருவர் பேரம் பேசும்போது எது யாருக்கு இடையூறாக இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும்போதும், அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை சொல்லும்போதும் , பேரம் மிக முக்கியமான ஆபத்தை நோக்கி செல்லுகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

உங்கள் உணர்வுகள் காயப்படுத்த பட்டால் , நீங்கள் பேரத்திலிருந்து பின் வாங்குமாறு பெறுபவர் உங்களுக்கு சொல்வார். அந்த ஆலோசனையை கட்டுப்படுத்தும் அளவுக்கு புத்தி கூர்மையை பயன்படுத்தாவிட்டால், பேரம் வாக்குவாதமாக மாறும் . ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் கவனத்தில் வைத்து கொண்டால் , புத்திக்கூர்மையை பயன்படுத்தி வாதத்தை தவிர்த்து , நீங்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வந்து விடலாம் .
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here