Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 38

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 38

185
0
SHARE

குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் எதிர்காலத்திலும் புத்திசாலித்தனமான முடிவெடுக்க முடியாது என்று பொருளல்ல . அந்த விஷயத்தை பற்றி சிந்திக்கும் வாய்ப்பை தடுப்பதற்கு ஒரு காரணமாக அந்த முட்டுக்கட்டைகளை அனுமதிக்காதீர்கள். அப்படியே ஆற போட்டுவிட்டு, அதை சிறப்பாக நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம் என யோசியுங்கள்.

பேரம் பேசுவது உங்களுடைய பெறுபவரின் தூண்டுதலால் நிர்பந்தமாகவோ , நிந்தனையாகவோ , கோபமாகவோ மாறி , பேரம் கசந்து போய் யாரேனும் ஒருவருக்கு பிடிக்காமல் போகும்போது பேசுகிற விஷயத்தை நிறுத்திவிட்டு சந்தோஷமாக பேசுகிற வேறு ஏதேனும் விஷயத்தை பேசுங்கள்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு , உங்கள் துணைவர் தனது செயலுக்காக வருந்தி , எது கோபப்படுத்தியதோ அந்த விஷயத்திற்கு வர கூடும் . அந்த நேரத்தில் பழையதை கிளறாமல் தெளிவாகவும், நிதானமாகவும் விஷயத்தை அணுகுங்கள் .

கோபமோ , நிந்தனையோ , நிர்பந்தமோ இல்லாமல் எப்படி விஷயத்தை அணுகுவது என்பதைப்பற்றி தெளிவாக பேசிக்கொண்டு விஷயத்திற்கு வாருங்கள் . இதற்கு மாறாக , உங்கள் பெறுபவரை ஆதிக்கம் செலுத்த விட்டுவிட்டால் , உங்களுடைய அழிவு பூர்வமான உணர்வுகளால் பேரம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here