Home Women Part கரு முதல் குழந்தை வரை – பாகம் 23

கரு முதல் குழந்தை வரை – பாகம் 23

531
0
SHARE
இது எனக்கு எட்டாவது மாதம்.  எந்தப் பக்கம் படுத்தாலும் தூக்கம் வருவதில்லை.  என்ன செய்யலாம்?
ர்ப்பக் காலத்தில் பிற்பகுதியில், இரவில் ஆழ்ந்து தூங்குவது என்பது பலருக்குக் கஷ்டமாக இருக்கும்.  இந்த அசௌகரியம் மிக அதிகமாக இருக்கும்.  பல பெண்கள், இந்தக் காலத்தில் கெட்ட கனவுகளைக் காண்பார்கள்.  இத்தகைய கனவுகளில் சில விரும்பத்தகாதவையாகவும் இருக்கும்.  இத்தகைய கனவுகள் உங்கள் மனத்தை அரிக்க இடம் தரக் கூடாது.  நிறைய தலையணைகளைப் பயன்படுத்துங்கள்.  ஒரு தலையணையை உங்கள் வயிற்றுப் பகுதிக்குக் கீழும், இன்னொன்றை காலின் அடிப்பகுதியின் கீழும் வைத்துக்கொள்ளுங்கள்.  இரவில் நன்றாகத் தூங்க முடியவில்லையென்றால், பகலில் அந்த ஓய்வை எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

கர்ப்பக் காலத்தில் எவ்வளவு எடை அதிகரித்து இருக்க வேண்டும்? எனக்கு இயல்பான எடை உள்ளதா என அறிந்துகொள்ள வழி என்ன?
கர்ப்பக் காலத்தில் ஒன்பது முதல் பன்னிரெண்டரை கிலோ வரை எடை அதிகரித்திருக்க வேண்டும்.  குழந்தையைச் சுற்றியுள்ள நஞ்சு மற்றும் பனிக்குட நீரின் காரணமாகவும், கர்ப்பத்தின்போது மார்பகங்கள் மற்றும் கருப்பை பெரிதாவதாலும் இவ்வாறு எடை கூடுகிறது.
முதல் பத்து வாரத்தில் வாரத்துக்கு 22 கிராம் வரை எடை அதிகரித்து, இருபதாவது வாரத்தில் இரு மடங்காக உயரும்.  பாலூட்டும்போது தேவைப்படும் என்பதற்காகச் சேமித்து வைக்கப்படும் கொழுப்பின் காரணமாகவும் எடை  உயரும்.  முதல் இரண்டு மாதங்களில் மசக்கை ஏற்படுவதால் இயல்பான எடையைவிடக் குறைந்திருக்கும் என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

நான் முதன்முறையாகக் கர்ப்பம் தரித்திருக்கிறேன்.  எனது வயிறு இன்னும் பெரிதாகத் தெரியவில்லை.  ஆனால், இரண்டாவது முறையாகக் கர்ப்பமாக இருக்கும் எனது தோழியின் வயிறு பெரிதாக இருக்கிறது.  ஒருவேளை எனது கர்ப்பத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.  என்ன செய்யலாம்?
முதன்முறையாகக் கர்ப்பம் தரிப்பவர்களின் வயிறு பெரிதாகி வெளியே தெரிவதற்கு வழக்கமாக நீண்ட நாள்களாகும்.
கருப்பையானது கூபகத்தைத் தாண்டி மேல் நோக்கி வளரும்போதுதான் வயிறு தெரிய ஆரம்பிக்கும்.  எனவே, கர்ப்பகாலத்தில் முதல் அரைப்பகுதி முடியும் காலம் வரை இது கவனத்தை ஈர்ப்பதில்லை.  முதன்முறையாகக் கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றைவிட, ஏற்கெனவே குழந்தை பெட்ரா பெண் மீண்டும் கர்ப்பம் தரிக்கும்போது அவளுடைய வயிற்றுச் சுவர் தளர்ச்சியிருப்பதால் விரைந்து பெருக்கமாகத் தெரியும்.  இதைப்பற்றி கவலைப்படாமல் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here