Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 93

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 93

347
0
SHARE

மன இறுக்கத்தைத் தவிர்க்கும் வழிகள்

மது உணர்வுகளை நம்பத் தகுந்தவர்களோடு மனம் விட்டு பகிர்ந்துகொள்ளுதல், மனம் விட்டுப் பேசுதல், மனம் விட்டு அழுதல் போன்ற வழிகளில் மன இறுக்கத்தைத் தளர்த்தி, மூளையை லேசாக்கும் சிக்கலான சூழலில் இருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பற்றி குழுமமாக விவாதிக்கும்போது மன இறுக்கம் குறையும்.

மற்றவர்களுக்காக எதையாவது செய்துகொண்டிருங்கள். பிறருக்காக உழைக்கும்போது மன இலகுவாகும்.

தனியாக இருந்தால் உடற்பயிற்சி செய்யுங்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிருங்கள். தசை இறுக்கத்தைத் தளர்த்துங்கள். மனதுக்கு இதமான இசை கேளுங்கள். நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.

எப்போதும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி, சமசீரான உணவுமுறை, நல்ல பழக்க வழக்கங்கள், குடும்பத்தினருடன் ஐக்கியம், வாழ்க்கை முறையில் நல்ல மாற்றம் போன்றவற்றை கை கொள்ளுங்கள். கூடுமானால் யோகா செய்யுங்கள். மன இறுக்கம் குறையும், மூச்சை ஆழ்ந்து இழுத்து சுவாசிப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டால் மன இறுக்கத்தின் அளவு கணிசமாகக் குறையும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here