Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 39

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 39

296
0
SHARE

விவாதத்தை உற்சாகமாகவும் , பாதுகாப்பாகவும் கொண்டு செல்லக்கூடிய உத்தரவாதம் தரும் அடிப்படை விதிகளை ஏற்படுத்தி கொண்ட பிறகு , பேரம் பேசுவதற்கு தயாராக வேண்டும் . ஆனால் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதை உங்கள் கோணத்திலிருந்தும் , உங்கள் துணைவரின் கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் .

ஒருவருடைய பிரச்சினைகளை ஒருவர் புரிந்துகொள்ளும் போது , ஒருவரின் கருத்துகளை ஒருவர் புரிந்து கொள்ளும் போது அப்பிரச்சினைகளை பற்றி தாம் நினைத்த அளவுக்கு பெரிதாக இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள் . ஒரு விஷயம் தெளிவுபடுத்த பட்ட பிறகு , அதற்கான தீர்வு உடனே கிடைத்துவிடுவதால் கருத்து வேறுபாடு என்பது முற்றிலும் இல்லாமல் போய்விடும் .

பேரம் பேசுவதில் வெற்றிக்கு வழியாக இருப்பது மரியாதை . நீங்கள் எதை பற்றி பேசுகிறீர்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு, ஒவ்வொருவரும் அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளும்போது , யார் யார் என்ன புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அந்த புரிதலுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமே தவிர புரிய வைத்து சரிபடுத்தலாம் என நினைக்க கூடாது.

உங்களுடைய நோக்கம் உற்சாகமான ஒப்பந்தமே தவிர , ஒருவரின் புரிந்து கொள்ளுதலை நீங்கள் நிராகரித்து விடுவதில் உற்சாகமாக இருக்க வழிதேட கூடாது . நீங்கள் ஒருவரை ஒருவரர் புரிந்துகொள்வது மட்டுமல்ல , உங்கள் இருவரின் புரிந்து கொள்வதற்கு ஏற்ப , இருவருக்கும் பொருத்தமான முடிவுக்கு வருவதுதான் உற்சாகமான ஒப்பந்ததை அடையும் வழி என்பதை இருவருமே தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் இலக்கு உற்சாகமான ஒப்பந்தம் என்னும்போது பேரம் பேசுவது சுலபமாக இருக்கும் .ஒருவர் மற்றவரை கேவல படுத்திக்கொள்ளும் அனைத்தையும் அது தவிர்த்து விடும் . உற்சாகமான உடன்படிக்கையை மேற்கொண்டிருக்கும் போது நிர்பந்தப்படுத்துவதை மறந்துவிடுவீர்கள் .இவ்வாறே நிந்தனை செய்வதும் , கோபத்தில் பேசுவதும் இருக்காது . உங்கள் பிரச்சினைக்கு உண்மையான் தீர்வை நாடுவீர்களேயானால் உற்சாகமான ஒப்பந்தம் எதை பற்றியதாக இருந்தாலும் அதற்கு விருப்பத்துடன் சம்மதிப்பீர்கள்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here