Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 41

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 41

290
0
SHARE
beautiful young couple sitting on a sofa

நீங்கள் ஒரு கருத்தை வெளியிட்டவுடனே அதற்கு எதிர்ப்பு வரலாம். உதாரணமாக நீங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி பேசிக்கொண்டிருப்பதை உங்கள் துணைவர் விரும்பாமல், கிடைக்கிற ஓய்வு நேரத்தை கூட , தன்னுடன் செலவு செய்ய விரும்பாமல் இப்படி வீணடிக்கிறாயே என ஆதங்கப்படுகிறார். இந்த நேரத்திலும் அதற்கு ஒரு மாற்று வழியை நீங்கள் இருவரும் யோசிக்க வேண்டும் .

குழந்தையை என் பெற்றோரிடம் விட்டுவிட்டு வா, நாம் வெளியே போய் வரலாம் என அவர் சொன்னால் , இருவரும் சேர்ந்து , அது சரி என்ற தீர்மானத்திற்கு உற்சாகமாக வந்து விட்டால் இரண்டு மணி நேரத்தில் இருவருமே வெளியே சென்று வரலாம் . பிரச்சினை தீர்ந்துவிடும்.

ஒரு பிரச்சினையை தீர்க்க முனையும்போது அதற்காக பல வழிகளில் சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது. பிறரின் உணர்வு தேவைகளை சந்திக்க முயலும்போது அதற்கான பயிற்சியும் , முயற்சியும் தேவை . சில சமயம் அதில் சிறுசிறு தவறுகளும் நிகழலாம் . இவற்றை பழக்கத்தின் மூலம் சரிசெய்து கொண்டு விட்டால் சிரமம் தெரியாது.

இந்த விஷயத்திலெல்லாம் நீங்கள் பேரம் பேச வேண்டும் . எல்லா நேரங்களிலும் பேரம் பேச முடியாது . நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவர் என்றால் , அந்த இடத்தில் கூட்டு ஒப்பந்த கொள்கை பலன் தராது . குடிப்பழக்கத்தை நீங்கள் முற்றிலும் நிறுத்திவிட்டால் தான் பேரம் பேச முடியும் . வாழ்க்கையும் சுமுகமாக செல்லும் .

இப்படி விட வேண்டியவைகளை விட்டுவிட்டு உற்சாகமான முடிவுக்கு வர பேரம் பேசுவதற்கு
வசதியான வழிமுறைகளை பின்பற்றினால் , பெரும்பாலான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் , உறவினர்களிடம் உள்ள பிரச்சினைகளையும் இதே வழியில் தீர்த்து கொள்ளலாம்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here