Home Infertility தம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 40

தம்பதியர்களுக்கான ஆலோசனைகள் – பாகம் 40

267
0
SHARE

சில பிரச்சினைகளை அணுகுவதற்கு பல நாட்கள் தேவைப்படலாம். அவற்றை தீர்ப்பதற்கான வழிகளை கண்டு பிடிப்பதும் கடினம் என்பதால் , பிரச்சினைகளையும் , அவற்றுக்கான தீர்வும் காண உங்களுக்கு என்னென்ன வழிகள் தோன்றுகின்றன என்பதையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் . ஆனால் உங்களுடைய ஒரே இலக்கு , இருவருக்குள்ளும் இருக்கிற பெறுபவர் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு அமைவதுதான்.

கொடுப்பவர் தரும் தீர்வை பெறுபவர் தடுத்து பின் வரும் ஆலோசனை கூறும் . அடுத்த முறை என் விருப்பத்திற்கு என்னை விட்டால் , இந்த முறை நீயா என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய்ய அனுமதிப்பேன் .

உதாரணத்திற்கு உங்கள் நண்பர்களோடு வெளியே செல்ல விரும்புகிறீர்கள் . பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது . துணைவரிடம் நான் வெளியே போக வேண்டியுள்ளதால் குழந்தைகளை இன்று பார்த்து கொள், நாளை நீ வெளியே செல்லும் போது நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வீர்கள் .

இப்படி ஓர் உடன்படிக்கைக்கு வருவோம். இந்த இடத்தில் தம்பதியர் ஒவ்வொருவரும் மற்றவர் தியாகம் செய்யும்போது மற்றவர் வேடிக்கை காட்டலாம் என நினைப்பார்கள் . ஒருவர் மகிழ்ச்சியடையும்போது இன்னொருவர் மகிழ்ச்சியடையாத நிலையை ஏற்படுத்துவது உடன்படிக்கையாக ஒப்புக்கொள்ளப்பட்டு பழக்கமாகிவிட்டால் இல்லறவாழ்வு தொல்லையான வாழ்வாக இருக்கும் .

கொடுப்பவரும் , பெறுபவரும் பிரச்சினைகளை பற்றி புரிந்துகொள்ளாததால் இருவருக்கும் வெற்றியான ஒரு தீர்வை தராமல் வெற்றி தோல்வி என்ற தீர்வைத்தான் தருகிறார்கள் . இரண்டுபேருமே சேர்ந்து துக்கப்படுவதுதான் சந்தோஷமான விஷயம் என அவர்கள் நினைகிறார்கள்.

இப்படியின்றி, இருவருமே பாதிக்காத வகையில் தீர்வு இருந்தால் தானே இருவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here