Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 42

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 42

572
0
SHARE

பொருளாதார திட்டம் பற்றி வரும் பிரச்சினைகளை சரி செய்தல்

ன்பு சுமதி என்று தம்பதியர் அவர்களுடிக்கையே பொருளாதார பிரச்சினை, அன்பு பட்ஜெட் போட்டுக்கொடுத்தான் . அதை பின்பற்றுவதாக சொன்ன சுமதி அதை பின்பற்றவில்லை . இதை பற்றி அன்பு கேட்ட போது , இந்த மாதம் மோசமான மாதமாகி விட்டது .அடுத்த மாதம் சரிப்படுத்தி கொள்கிறேன் என்றாள். ஆனால் அடுத்த மாதமும் போன மாதத்தின் கதையாகத்தான் முடிந்தது .

இதனால் எரிச்சலடைந்த அன்பு , மனைவியிடம் சுமதி உன்னுடைய செலவுகளை ஒரு முடிவுக்கு கொண்டுவரலாம் என நினைத்து , உன் பேரிலிருந்த கிரிடிட் கார்டுகளையெல்லாம் ரத்து செய்துவிட்டேன் . அதற்காக என்னை மன்னித்துவிடு , இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இதைவிட்டால் வேறு வழி எனக்கு தெரியவில்லை என்றான்.

ஒவ்வொரு வாரமும் அவளுக்கு போதுமான பணத்தை அவன் கொடுத்து வந்த போதும் , தன் ஒப்புதல் இல்லாமல் பணத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டான் என்பதால் அவன் மீதிருந்த கோபம் அவளுக்கு தணியவில்லை அதன் பிறகு அவள் முகத்தில் சந்தோஷமான தோற்றம் மாறி , சிடுசிடுப்பாக மாறி போனாள்.

பிரச்சினையில் ஒருவர் குழந்தை தனமாக நடப்பதாக நினைக்கிறார். ஆனால் உண்மையில் இருவருமே குழந்தை தனமாகவேநடக்கிறார்கள் .

எப்படியெனில் , பட்ஜெட் போட்டபோது சுமதி ஒப்பு கொண்டாள்.ஆனால் உற்சாகமாக ஒப்பு கொள்ளவில்லை . காரணம் அது அன்பு போட்ட பட்ஜெட் . அதை தன மீது அவன் சுமத்துவதாக நினைத்து கொண்டாள் . அவளது கொடுப்பவர் அவனுக்கு நன்மை செய்வதாக நினைத்து சரி என்று ஒப்புக்கு கொள்ள வைத்தது. ஆனால் அவளது பெறுபவர் , இது உன் நலனுக்கு தீங்காக தெரியவில்லையா என்ற சந்தேகத்தை அவளுக்குள் விதைத்து , அந்த பட்ஜெட்டை நிராகரிக்க செய்து விட்டது . முதல் முறை இந்த பட்ஜெட் நடந்தபோதே அவளது பெறுபவர் இந்த பேரத்தை ஒப்பு கொள்ளவில்லை .

அவளது பெறுபவர் பேரம் பேசுவதில் தயக்கம் காட்டியதால் ஏற்பட்ட சிக்கல் இது. அன்பு இதை உணர்ந்து, இருவரும் சேர்ந்து பேசி , அவளுக்குள் இருக்கிற பெறுபவர் திருப்தியாக ஒப்பு கொள்ளும் வகையில் பட்ஜெட் போட்டிருக்க வேண்டும் . அவளுடன் கலந்து பேசி அவளும் ஏற்கும் வகையில் ஒரு முடிவுக்கு வந்திருந்தால், அதை அவள் மதித்து நடந்து கொண்டிருப்பாள்.

அன்பு பணத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றது தப்பில்லை . பேரம் பேசாமல் நடந்து கொண்டதுதான் தவறு . அவர்கள் கூட்டு ஒப்பந்தப்படி ஒவ்வொன்றையும் பகிர்ந்து கொள்ளும்போது விளைவுகள் நன்றாக இருக்கும்.

பணபிரச்சினை என்பது குடுமப்த்தில் மிக முக்கியமான பிரச்சினை . இதை சமாளிக்க நினைக்கும்போது ஒருவர் மட்டுமே திட்டமிட கூடாது . தம்பதியர் இருவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here