Home Infertility தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 43

தம்பதியர்களின் ஆலோசனைகள் – பாகம் 43

300
0
SHARE
beautiful young couple sitting on a sofa

வேலைகள் சார்ந்த காரணங்காளால் வரும் பிரச்சனைகளை தீர்த்தல்

குமாருக்கு நிறுவனத்தில் வேலை சார்ந்த காரணங்களால் தன் மனைவி ரேகா, குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை. இப்படியே போய் கொண்டிருந்தாள் அவர் கண்டிப்பாக எங்களை இழக்க வேண்டியிருக்கும் என்று அழுதாள். திருமண உறவில் தம்பதியர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இருவரையும் பாதிக்கும் . ஆகவே , அவர்கள் இருவரும் ஒரு விஷயத்தை பற்றி தீர்மானம் எடுக்கும் போது ஒருவருடைய உணர்வை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு உழைத்தால் மேலும் பதவி உயர்வு கிடைக்கும் . இந்த நிலையில் இப்படியொரு பூதாகரமான பிரச்சினை எதிரில் நிற்கிறதே என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்தார். ஆனாலும் மனைவிக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னதை ஏற்று கொண்டு , அவளுடைய விருப்பத்திற்கேற்ப கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள முன் வந்து விட்டார்.

இந்த வேலை போனாலும் , சொற்பமான சம்பளத்தில் இதைவிட குறைவான வேலை கிடைத்தாலும் மீண்டும் தன் மனைவி , அவளால் தனக்கு கவுரவம் ஆகியவை வந்தால் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டதை அறிந்து ரேகா அதிர்ந்து போனாள் .

தன் கணவன் மீது அவளுக்கு மீண்டும் பாசம் வந்தது . இதுவரை தன்னைவிட வேலைதான் அவருக்கு முக்கியம் என்று நினைத்துவந்த ரேகா, அவளுக்காக குமார் வேலையை விட்டு விடுவதாக சொன்ன போது , வேண்டாம் எனக்கு முக்கியத்துவம் மட்டும் கொடுத்தால் போதும் என்றாள் . இதைத்தான் அவள் விரும்பினாள் .

அவனுடைய வேலையை பற்றிய விவரதையும் , அதை சார்ந்து புதிய வாழ்க்கை சூழலை உருவாக்குவது பற்றியும் இருவரும் விவாதித்து , ஒரு முடிவுக்கு வந்தார்கள் . இது அவர்களுடைய உணர்வு தேவைகளை சந்திப்பதாக இருந்தது .

ஆகவே , இருவரும் சேர்ந்து எடுக்கிற முடிவுகளை தொடர்ந்து பின்பற்றினால் அது நிச்சயம் உங்கள் எதிர்கால வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் . அந்த மாற்றம் இப்போதுள்ள சந்தோஷத்தை காட்டிலும் பல மடங்கு அதிக சந்தோஷத்தை தரும் . ஒருவர் மீது ஒருவர் அன்புடன் காதலுடன் இருக்க வழி செய்யும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here