Home Common Health Problems குழந்தையை படுக்க வைக்கும்போது கவனிக்க வேண்டியவை

    குழந்தையை படுக்க வைக்கும்போது கவனிக்க வேண்டியவை

    201
    0
    SHARE

    நிறைய பெரியவர்கள் தலையணையை பக்கத்தில் வைத்து மெத்தையில் குழந்தையைக் கிடத்துவார்கள். முதல் ஓரிரு வாரங்களுக்கு இது பரவாயில்லை. ஆனால் குழந்தை அசைய ஆரம்பித்துவிட்டால் தலையணைகளும், மெத்தையும் ஆபத்தாக முடியும்.

    எனவே, தலையணைக்கு பதிலாக கடைகளில் விற்கப்படும் பைபர் அல்லது போம் இலைகளால் ஆன அணையாடையை வாங்கி வரலாம். குழிவாக இருக்கும் இந்த மாதிரி அணையாடைகளால் குழந்தைக்குப் பிரச்னை வராது.

    உடை விஷயங்கள்

    வீட்டில் அல்லது மருத்துவமனையில் உங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கிற செய்தி கேட்டு உறவினர்கள் முதலில் வாங்கி வரும் பரிசுப் பொருள் ஆடை.

    தாயார் பிரசவித்த குழந்தையோடு படுத்திருக்க, தந்தையார் ஆசையாக வாங்கிவரும் பொருளும் ஆடைதான்.

    குழந்தைக்கு ஆடை வாங்கும்போது பருத்தியாலான நன்றாக திறப்பு வைத்த ஆடை வாங்குவது நல்லது. முதலில் ஓரிரண்டு ஆடைகளை வாங்கினாலே போதுமானது, குழந்தை வளர வளர நிறைய வாங்கிக்கொள்ளலாம்.

    ஆட்டுத்தோலால் ஆன உடைகள், இறுக்கமான ஸ்வெட்டர்களைத் தவிர்க்க வேண்டும். இவை குழந்தையின் உடல் வெப்பத்தை அதிகப்படுத்திவிடும். ஆடை வாங்கும்போது பின்வரும் விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாப்பி
    குழந்தையைச் சுற்றி வைப்பதற்கான டவல்
    குழந்தைக்குப் பாலூட்ட பாட்டில், கெண்டி மற்றும் பாலாடை, டீட்ஸ், பாலூட்டும் முறை பற்றிய விளக்ககையேடு.

    படுக்க வைப்பதற்கான விரிப்புகள்.
    குழந்தையை குளிக்க வைக்கும் சிறிய தொட்டி
    சிறிய கட்டில்
    பேபி நாற்காலி
    குழந்தையின் உடைகளை வைப்பதற்கு வசதியாக ஒரு கிட் பேக்

    போன்றவற்றை வாங்கிவிட வேண்டும்.

    குழந்தைக்கு வாங்குவது செலவு மிக்கதாகத் தோன்றும். ஆனால் இது இன்பச் செலவு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    Dr Jeyarani
    – ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here