Home Common Health Problems இதய நோயாளிகளின் சிறப்பு வரலாறு

    இதய நோயாளிகளின் சிறப்பு வரலாறு

    325
    0
    SHARE

    ரு மருத்துவர் இதய நோய் இருக்கும் வாய்ப்புடையவரைச் சந்திக்கும்பொழுது மாரடைப்பு நோய் இருப்பதற்கான அறிகுறிகளை உறுதி செய்துகொள்வது அவரது குறிக்கோளாக இருக்கவேண்டும் .எடுத்துக்காட்டாக ,மார்பின் இடது பகுதியில் துவங்கி இடதுகை வரை பரவும் வலி 70 சதவீதத்திற்கும் அதிகமான அடைப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது . இந்த வலி உடலை வருத்திச் செய்யும் வேலையின் தொடர்புடையது. அந்த வேலையை நிறுத்தினால் வலி நின்றுவிடும்.

    மன அழுத்தம் அல்லது அதிக உணவு உட்கொள்வதால் இந்த வலி அதிகரிப்பதாக சிலர் புகார் செய்கின்றனர். பலர் உடல் அசௌகரியம், மூச்சுத்திணறல் அல்லது மூச்சடைப்பு ஏற்படுவதாக முறையிடுகின்றனர். அவைகளும் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மாரடைப்பு நோயைக் குறிப்பிடுகின்றன. சில சர்க்கரை நோயாளிகள் மார்பு வலியைப் புகார் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் மூச்சுத் திணறலைப் பற்றி புகார் செய்கின்றனர். சர்க்கரை நோயினால் நரம்புகள் சேதமாவதனால் அடிப்படையில் அவர்களுக்கு நோயினை உணர முடியவில்லை.

    நெஞ்சுவலி பற்றிய வரலாறு அதன் தீவிரம் பற்றிய மூலக் கருவையும் நமக்கு தெரிவிக்கிறது. நெஞ்சுவலி அல்லது மார்பு இறுக்கம் 4 வகைப்படும். ஓய்வாக இருக்கும்போது ஏற்படுவது 4- ஆம் வகையாகும். எளிய செயல்கள் செய்யும்போது ஏற்படுவது 3- ஆம் வகை. நோயாளி சுமார் ஒன்று முதல் 2 கிலோமீட்டர் வரை எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் மெதுவாக நடக்க இயலும்.இது இரண்டாம் வகை. முதல் வகை மார்பு இறுக்கம் என்பது நோயாளி மலையின் மீது ஏறுதல், ஓடுதல் அல்லது பளு தூக்குதல் போன்ற உடலை வருத்தும் வேலைகளைச் செய்யும்பொழுது ஏற்படக்கூடிய வலியின் அறிகுறியாகும்.

    நோய் வரலாற்றில் மருத்துவர்கள் நோயாளியிடம் தெரிந்து கொள்ள வேண்டியவை பின் வருமாறு. ஏற்கெனவே மார்பு இறுக்கம் இருந்ததா? இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற உபாதைகளுடன், புகையிலை மெல்லுதல், புகைபிடித்தல், குடும்பத்தில் முன்னோர்களுக்கு இதய நோய் இருந்தது பற்றிய விவரம், உணவுப் பழக்கம், கடந்த காலத்தில் இருந்த கொழுப்புகளின் அளவு பற்றிய குறிப்பு முதலியவையாகும்.

    மேற்கண்ட இந்த விவரங்கள் மருத்துவருக்கு நோயின் காரணத்தை அறிந்துகொள்வதோடு அதனை குணப்படுத்தவும் உதவும். இவை நோயாளியைப் பரிசோதிக்கும் முறைகளில் முக்கியமான ஒரு பகுதியாக இருப்பதோடு, மற்ற நவீன சோதனைகளை விடவும் அதிகமுக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும்.

    துரதிர்ஷ்டவசமாக, இன்றைய இதய நோய் நிபுணர்கள் இந்த முறையைப் பின்பற்றுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் – ஒன்று; காலம் இன்மை, இரண்டு; அவர்கள் அறுவை சிகிச்சை அல்லது ஏன்ஜியோபிளாஸ்டி செய்வதிலேயே ஆர்வத்துடன் உள்ளனர். நோயாளியின் நீண்ட கால முன்னேற்றத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை.


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here