Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 100

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 100

265
0
SHARE

ல்ல கொழுப்பின் அளவு குறைந்தாலும், கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்தாலும், இரண்டுமே தேவையை விட குறைந்தாலும் சர்க்கரை நோயின்போது நாளங்கள் துரிதமாக கேடுற்று தொடர்ச்சியாக இதயம் பாதிக்கப்படும்.

இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், நமக்கு தினமும் இரண்டாயிரம் கலோரி சத்துக்கள் மட்டுமே தேவை. கூடுதலாக கிடைப்பவை எல்லாம் கிளைகோஜெனாக மாற்றப்பட்டு உடலில் ஆங்காங்கே சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.

எடை கூடினால் எப்போதும் பாரமான ஒரு பையை கழுத்தில் கட்டி தொங்கவிட்டுருப்பதைப் போல தேவையில்லாமல் உடற்பருமனை சுமக்கவேண்டியிருக்கும். இதயத்திற்கும் கூடுதலான பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும், நுரையீரலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காது.

கொழுப்புகள் அனைத்தும் கொழுப்புச் செல்களைவிட தசைச் செல்களில்தான் அதிகமாக சேமித்துவைக்கப்பட்டிருக்கும். நமது உடம்பிலுள்ள அரை கிலோ தசையானது சுமார் 35 முதல் 45 கலோரிகளை செலவழிக்கும். ஆனால் இதே எடையுள்ள கொழுப்புத் திசு வெறும் இரண்டு கலோரிகளை மட்டுமே செலவழிக்கும். கொழுப்புத் திசுக்களை விட தசைத் திசுக்களே அதிகம் என்பதால்தான் நாம் உட்கார்திருந்தாலும் நடந்தாலும் கலோரிகள் எரிக்கப்பட்டு செலவாகின்றன.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here