Home Common Health Problems தொப்புள் கொடியை சுத்தப்படுத்த வேண்டுமா?

    தொப்புள் கொடியை சுத்தப்படுத்த வேண்டுமா?

    612
    0
    SHARE

    மாம். பருத்தித் துணி, கொதிக்க வைத்து ஆறவைத்த நீர், ஆண்டி செப்டிக் பொருட்கள், பாக்டீரியா எதிர்ப்பு பவுடர்கள் ஆகியவற்றால் நாப்பியை மாற்றும்போது தொப்புளை சுற்றி சுத்தப்படுத்தலாம்.

    தொப்புள் தொடுவது குழந்தைக்கு வலி உண்டாக்குமா?

    நோய்த் தொற்று இல்லாதவரை வலிக்காது. ஆகவே தொப்புளை துடைத்து எடுப்பதை பற்றி பயப்பட வேண்டாம்.

    தொப்புள் கொடி எப்போது விழும்?

    குழந்தை பிறந்த 5முதல் 9 நாட்களுக்குள் விழும். இதற்கு முன்பாகவே தொப்புள்கொடி உலர்வாக இருந்தால் விழுந்துவிடும். நோய்த்தொற்று ஏதேனும் இருந்தால் தொப்புள்கொடி விழுவதற்கு நீண்ட நாட்களாகும்.

    குழந்தையின் தொப்புள்கொடியில் ரத்தம் வருவது ஏன்?

    தொப்புள்கொடி பிரிய ஆரம்பிக்கும்போது பழைய இரத்தத்தில் சில சொட்டுகள் வரக்கூடும். சில நேரங்களில் ஒரு சின்ன இடத்திலிருந்து ரத்தக்கசிவு வரலாம். சுத்தமாக வைத்துக்கொண்டால் சரியாகி விடும்.

    தொப்புள் கொடி சொதசொதப்புடன் சிவந்திருந்தால்?
    உதிர்வதற்கு முன்பு தொப்புள்கொடி சொதசொதப்பாக இருப்பது இயல்பு. தொடர்ந்து துர்நாற்றம் வந்தால் நோய்த்தொற்று காரணமாக இருக்கலாம். ஆண்டிபயாடிக் சிகிச்சை தேவைப்படலாம்.

    Dr Jeyarani
    – ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here