Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 109

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 109

412
0
SHARE

ர்க்கரை நோய் பரவலாக வருவதற்கு என்ன காரணம் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

பரம்பரை மிக முக்கியமான காரணம். சர்க்கரை நோய் பல குடும்பங்களில் பரவலாகக் காணப்படுகிறது. தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகியோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்களது குடும்பத்தைச் சேர்த்தவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். தாயும், தந்தையும் பட்டவர்களாக இருந்தால் பிள்ளைகளுக்கு வர, 85 முதல் 100 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளது.

உடல் பெருமை, மன அழுத்தம் மற்றும் படபடப்பான மனநிலை உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோய் வர கூடுதல் வாய்ப்பு உள்ளது. சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

இந்த நோய் உள்ளுக்குள் மறைந்திருக்கலாம். ஒரு விபத்தோ, கர்ப்பமோ, கட்டியோ ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன், செய்யப்படும் சோதனைகள் அல்லது தற்செயலான பரிசோதனைகள் மூலமாகவே இது அறியப்பட நேரிடுகிறது.

சர்க்கரை நோயை உண்டாக்கும் காரணிகள்

பரம்பரை இன்சுலின் போதுமான அளவு சுரக்காதது – சரியாக வேலை செய்யாதது

கணையத்தில் ஏற்படும் அழற்சி

அடிக்கடி அதிகமாகச் சாப்பிடுதல்

தொடர்ந்து மது அருந்துதல்

கர்ப்பக் காலம்

அடிக்கடி குழந்தை பெறுதல்

உடல் உழைப்பு இல்லாதது

கவலை, மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here