Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 110

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 110

429
0
SHARE
மருத்துவரை எப்போது அணுகுவது ?
பாலுறவுக்குறைகள்  அதிகமாக அதிகமாக  இருந்தாலும் அதைப்பற்றி வெளியே  சொல்வதற்குத்  தயக்கம்
பலருக்கு இருக்கிறது . காய்ச்சல் வந்தால், வேறு பிற நோய்கள் வந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஓடுகிறாம் . ஆனால்  பாலுறவு சார்ந்த  விஷயங்கள் என்றால் யாரிடமும் சொல்லாம் மறைத்துவிடுகிறோம் . இது தவறானது.
மற்றவர்களிடம்  கூறுவது நமது ஆளுமைக்கு இழுக்கு என்றோ, தவறாகப் போய் முடியும் என்றோ கருதுவது இயல்பு. இது சரியானதும் கூட. ஆனால்  மருத்துவரிடம்  இகுறைகளைப்  பற்றி இம்மியளவும் மறைக்கக்கூடாது. மற்ற  உடல் நலப் பிரச்சினைகளைப் போன்றதுதான் பாலுறவு சார்ந்த குறைகளும் என்ற எண்ணம் , தெளிவு ஒவ்வெருவருக்கும்

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பதை அறியும் மருத்துவர் , அதைக் கட்டுப்படுத்தாத நிலையில் செஸ்ஸ் சார்ந்த பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை மருத்துவர் அறியமாட்டாரா? இதைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் அந்தத் பிரச்சினையும் போக்கிக்கொள்ள வேண்டும்.

சரி , எப்போது மருத்துவரைப் பார்ப்பது?

நாள் முழுக்க வேலை செய்து களைத்து வீடு திரும்புகிறீர்கள். உங்கள் துணைவருக்கு பாலுறவு தேவைப்படுகிறது. நீங்களும் சரி , பரவாயில்லை , இருந்தால் நல்லதுதான் என நினைக்கிறீர்கள் . ஆனால் உங்களுக்கு விரைப்புத் தன்மை ஏற்படவில்லை. அடுத்த முறை முயற்சிக்கிறீர்கள் ,விரைப்புத் தன்மை ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பிரச்சினைகள் மருத்துவ உதவி தேவையில்லை.அவ்வப்போது இத்தைகைய விரைப்பு இல்லாமை என்கிறது பிரச்சினை வருவது சகஜம் .இது அடிக்கடி ஏஏற்பட ஆரம்பித்தால் , அல்லது தொடர்ந்து சில மாதங்கள் வரை நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும்.

நீங்கள் பாலுறவு கொள்ள முயற்சிக்கிறார்கள்.
விரைப்புத்தன்மை பதியளவுதான் ஏற்படுகிறது .
பெண்ணின் புணர்புழைக்குள் செலுத்தும்
அளவுக்கு விரைப்பாக இல்லை.
தீவிர ஆண்மைக்குறைவுள்ள நிலைகளில் ஆணுக்கு சிறிதளவுகூட விரைப்புத் தன்மை உண்டாகாது . குறைந்தளவு விரைப்புத் தன்மை ஏற்பட்டாலும் , அல்லது ஏற்படாமல் போனாலும் மருத்துவரை கலந்தலோசியுங்கள்.

உங்கள் விரைப்புத் தன்மை நன்றாக வருகிறது
ஆனால் பாதியிலோயே துவண்டு விடுகிறது .

இப்படிப்பட்ட நிலை உங்களை மட்டுமின்றி , உங்கள் துணைவருக்கும் வெறுப்பை உண்டாக்கும் . முழுமையற்ற பாலுறவு திருப்தியைத் தருவதில்லை . இந்த நிலை நீடித்தால் உடனடியாக மருத்துவரைப் பாருங்கள் .


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here