Home Common Health Problems ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 17

    ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 17

    43
    0
    SHARE

    தலைவலி

    ண்ணுக்கு ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் மிக முக்கியமான உப விளைவு , தலைவலி , கம்யூட்டர் துறையில் உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு முன்னைந்தலையில் தான் வலி தோன்றுகிறது .

    மிக சிலருக்கு மட்டுமே பின்னந்தலையில் வலி உண்டாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இத்தகைய தலைவலி காலையில் எழுந்திருக்கும்போது இருப்பதில்லை . அதேபோல் , வேலைக்கு செல்லும் போதும் வேலையை ஆரம்பித்த முதல் சில மணித்துளிகளில் வரையிலும் தலைவலி வருவதில்லை . பிறகு மெல்ல ஆரம்பிக்கிற தலைவலி , கொஞ்சம் கொஞ்சமாக கூடுதலாகிறது . காபி குடித்தாலோ , அல்லது மாத்திரைகள் சாப்பிட்டாலோ , வலி இல்லாதது போன்று அப்போதைக்கு தெரியும் . ஆனால் , வலி உண்மையில் குறைந்திருக்காது . கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் அறையில் விளக்குகள் முறையாக அமைக்கப்படாதது, மானிட்டரில் இருந்து வெளிவரும் ஒளி அலைகள் போன்றவையே தலைவலி வருவதற்கு முக்கிய காரணிகள் .

    மங்கலான பார்வை

    ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் பொருளின் மீது பார்வையை , மிக சரியாக குவிக்கும்போது தான் அந்த பொருளை துல்லியமாக பார்க்க இயலும் . பொருள் இருக்கும் இடம் , அதன் அளவு போன்றவற்றை நம் கண்ணின் மணி தீர்மானித்து , அதன்படி பார்வையை குவிக்கும் . இந்த தன்மை, வயதாகும்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும் . பார்வையும் மங்கலாகும் . ஒரு பொருளை எவ்வளவு உற்று பார்த்தாலும் , அந்த பொருளை துல்லியமாக பார்க்க இயலாமல் போய்விடும் .

    ஐ. டி. வல்லுநர்கள் பலருக்கும் இக்குறைபாடு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.

    கம்ப்யூட்டர் திரை அழுக்கடைந்து இருத்தல் , மானிட்டரை சரியானபடி பார்க்க இயலாமை , ஒளி பிரதிபலிப்பாவது மற்றும் அதிகப்படியான வண்ணம் வரும்படி மானிட்டரை அமைத்திருப்பது ஆகியவை இக்குறைப்பாட்டை உருவாக்குகின்றன .

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here