Home Diabetes நீரிழிவு நோயை சமாளிப்பது எப்படி ?

நீரிழிவு நோயை சமாளிப்பது எப்படி ?

328
0
SHARE

ஆள்பளக்கோஸிடேஸ் குறைப்பான்கள்

கார்போஹைட்ரேட்டை உடைத்து சீரணமண்டலப் பாதையில் குளுக்கோஸாக  மாற்றும் என்ஸைம்களைக் குறைத்து இந்த என்சைம்களின் இயக்கத்தை தடுப்பதால் கார்போஹைடிரேட் செரிமானம் தாமதப்படுத்தப்படுகிறது.எனவே குளுக்கோஸ் வழக்கத்தை விட மெதுவாக ரத்த ஓட்டத்தில் நுழைகிறது.இதனால் இரத்தத்தில் குளுக்கோஸ் தீடிரென உயர்வது தடுக்கப்படுகிறது.குறிப்பாக உணவுக்கு பிறகு ஏற்படும் உயர்வு தடுக்கப்படுகிறது.

இந்த வகையில் அகர்போஸ் மற்றும் மெக்லிடால் என்னும் மருந்துகள் உள்ளன.இதனை ஒவ்வொரு உணவுடன் தீவிரமாக இரத்த குளுக்கோஸை குறைத்துக் கட்டுப்படுத்துவதில்லை.எனவே உணவுக்குப் பின் ஏற்படும் இரத்த குளுக்கோஸ் உயர்வினைக் குறைக்க மற்ற மருந்துகளுடன் இனைத்து இதனைப் பயன்படுத்துகின்றன.

இம்மருந்தினைத் தனித்து உபயோகிக்கும்போது தாழ்க்ளுக்கோஸ் நிலை ஏதும் ஏற்படாது.ஆனால் மற்ற மருந்துகளுடன் குறிப்பாக சல்பனைல் யூரியா மற்றும் இன்சுலினுடன் இணைத்துக் கொடுக்கும்போது தாழ் குளுக்கோஸ் நிலை ஏற்படலாம்.அப்படி ஏற்பட்டால் பால் அருந்தலாம்,குளுக்கோஸ் நிலை ஏற்படலாம்.அப்படி ஏற்பட்டால் பால் அருந்தலாம் ,குளுக்கோஸ் நிலை ஏற்படலாம்.ஆனால் சர்க்கரை அல்லது பழச்சாறு உபயோகிக்க வேண்டாம்.ஏனெனில் இதன் உட்கிரகிப்பை அவை தடுக்கும்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here