Home Diabetes நீரிழிவு நோயை சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயை சமாளிப்பது எப்படி?

589
0
SHARE

ஆள்பக்ளுகோஸிடேஸ் குறைப்பான்கள்
கவனத்தில் கொள்ள வேண்டியவை

சீரண மண்டலப் பக்கவிளைவுகளைக் கவனத்தில் கொள்ளும்போது உங்களுக்கு ,
சிணுங்கும் குடல் நோய்குறித்தொகுதி (இரிடபிள் பவல் சிண்ட்ரோம் )

புண்ணாகும் பெருங்குடறலர்ஜி (அலசரேட்டிவ் கொலிடிஸ் ) கிரான்ஸ் நோய்
சிறுகுடல் பகுதி அடைப்பு
நாள்பட்ட உட்கிரகிப்புக் கோளாறுகள் (எ.கா:சிலியாக் நோய் )
கடும் சிறுநீரக நோய்கள் மற்றும் கல்லிரல் நோய்கள் போன்றவை இருந்தால் இம்மருந்தினை (அகர்போஸ் , மேக்ளிடால் ) எடுத்துக் கொள்ள வேண்டாம்.அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது அகரபோஸ் உங்கள் கல்லிரலை பாதிக்கும்.ஆனால் இந்தப் பாதிப்பு மருந்தின் அளவைக் குறைத்தலோ அல்லது நிறுத்திவிட்டாலோ சரியாகிவிடும்.

தயாசோலிடின்டயோஸ்
வகை 2 நீரிழிவு உள்ள பலருக்கு இன்சுலினுக்கு எதிர்ப்புணர்வு தோன்றி இன்சுலின் பணியாற்றுவதை தடுக்கும்.இவை உடல் திசுக்களில் இன்சுலின் எதிர்ப்புணர்வைக் குறைத்து இரத்த குளுக்கோஸ் குறைய உதவுகிறது.இரத்த ஓட்டத்தில் உள்ள குளுகோஸ் உயிரணுக்குள் கடத்தப்படுவதால் மிகக் குறைந்த அளவு குளுக்கோஸெ இரத்தத்தில் தங்குகிறது.இதனால் இரத்த குளுகோஸின் அளவு குறைகிறது.இந்த வகையில் பயோகிளைடசோன் மற்றும் ரோஸிகிளைடசோன் ஆகியவை புழக்கத்தில் உள்ளன.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here