Home Women Part குழந்தைப் பேறு ……

குழந்தைப் பேறு ……

646
0
SHARE

ந்த நிலை இருந்தால், கொனடோட்ரோபின் ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். மிகக் குறைந்த அளவு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு இருந்தால், கொனடோட்ரோபின் மாற்றுச் சிகிச்சை செய்யலாம். இதன்மூலம், மூன்றில் இரண்டு பங்கு பேர் கருத்தரிப்பார்கள்.

சிலருக்கு, மாதவிலக்கு தொடங்குவதற்காக மாத்திரைகள் கொடுப்பார்கள். இதைச் சாப்பிட்ட ஒன்று முதல் இரண்டு வாரங்களில் மாதவிலக்கு ஆகும். இல்லாவிட்டால், மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

கருவனுக் கூடுகள் வளர்ச்சி அடையும்போது, அது ஈஸ்ட்ரோஜனை ரத்த ஓட்டத்துக்குள் மெதுவாகச் செயல்படுமாறு தகவல் அனுப்பும். ஆனால், மாத்திரை கொடுக்கும்போது, அது ரத்தத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜனை ஹைபோதலாமஸிடம் இருந்து மறைந்துவிடும்.

அதனால், சினைப்பை சரியாக வேலை செய்யவில்லை என நினைத்து, ஹைப்போதலாமஸ் மேலும் ஹார்மோனை வெளியிடும்.இதனால் கருவணுக்கூடு மேலும் தூண்டபடுவதால், பிட்யூட்டரியில் இருந்து அதிகமான எல்.எச். சுரக்கும். இதைத் தொடர்ந்து, சில நாள்களிலேயே முட்டை முதிர்ந்து வெளியாகும். ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு உயர்ந்த பிறகு, மருந்து மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திவிடலாம்.

முதன்முறையாக மாத்திரை சாப்பிட்ட பிறகு, எல்.எச். மற்றும் எஃப்.எஸ்.எச். அளவைக் கண்டறிய, சில நாள்களுக்குப் பிறகு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here