Home Diabetes நீரிழிவைச் சமாளிப்பது எப்படி ….

நீரிழிவைச் சமாளிப்பது எப்படி ….

761
0
SHARE

கவனத்தில் கொள்ள வேண்டியவை

வற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்வதால் இரத்த குளுக்கோஸ் அளவு குறைவதில்லை. ஆனால் சல்பனைல் யூரியா, இன்சுலின் போன்றவற்றுடன் இணைத்துக்கொடுக்கும்போது தாழ்குழுக்கோஸ் நிலை ஏற்படலாம். இவை கருத்தடை மாத்திரைகளை வலுவிழக்கச் செய்யும். நீங்கள் கரு முட்டை வெளிவராத நிலையில் இருந்தால் உங்களுக்குக் கருமுட்டை வெளிவரச் செய்து கர்ப்பம் தரிக்கும் நிலை ஏற்படலாம்.

மெக்லிடினைட்

இவை வேதியல் ரீதியில் சல்பனைல் யூரியாவிடமிருந்து வேறுபடுகிறது. ஆனால் இவற்றின் பலன்கள் அதே போல இருக்கின்றன. இவை வேகமாக இயங்கிக் கணையத்திலிருந்து இன்சுலினை வெளிப்படுத்துகின்றன. ஆனால் மிகக் குறைந்த காலமே இயங்குகின்றன. மிக விரைவாக இயங்கி மிக விரைவாக செயலிழப்பதால் இவற்றை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டிகிளைனைட் மற்றும் ரிபாகிளைனைட் ஆகிய இரண்டு மட்டுமே எஃப்டிஏ அங்கீகாரம் பெற்றவை. உங்களுக்குச் சிறுநீரக அல்லது கல்லீரல் நோய்கள் இருந்தால் உங்கள் மருத்துவர் இவற்றை எடுத்துக்கொள்ளலாமா, வேண்டாமா எனத் தீர்மானிப்பார்.


– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here