Home pregnancy குழந்தைப் பேறு ….

குழந்தைப் பேறு ….

734
0
SHARE
Young mother holding her newborn child. Mom nursing baby. Woman and new born boy in white bedroom with rocking chair and blue crib. Nursery interior. Mother playing with laughing kid. Family at home

சிலருக்கு எல்.எச். அதிகரித்து, எஃப்,எஸ்,எச். குறைவாக அல்லது மிக அதிகமாக உயரலாம். இந்த இரண்டு பிரச்சனையுமே கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும் என்பதால், இதைச் சீராக்குவது பற்றி மருத்துவர் உங்களோடு கலந்து பேசுவார்.

மாத்திரை சாப்பிடும் காலத்தில், எப்போது செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று சிலர் கேட்பார்கள்.

பொதுவாக, மாதவிலக்குக் காலத்தில் பதின்மூன்று முதல் பதினாறு நாள்களில் முட்டை வெளியாக வேண்டும். இந்த நேரத்தில், சிறுநீர்ப் பரிசோதனை கிட் வாங்கி வைத்துக் கொண்டு, சோதனை சேய்து பார்க்க வேண்டும்.

பதினாறாவது நாளில் சிறுநீரில் எல்.எச். ஹார்மோன் இல்லை என்று தெரிந்தால், டாக்டரிடம் தெரிவித்து அல்ட்ராசவுண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கருப்பை வரிப் பள்ளமும், கருவனுக் கூடும் வளர்ந்திருந்து, கரு முட்டை மட்டும் வளர்ச்சி அடையாமல் இருந்தால், அதைத் தூண்டிவிட மீண்டும் மருந்து கொடுப்பார்கள். அப்போது கரு முட்டைகள் வெளியாகாது என்று தெரிந்தால், சிகிச்சையை மறுமாதமும் தொடர வேண்டியிருக்கும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here