Home Women's Health குழந்தை வளர்ப்பு……

குழந்தை வளர்ப்பு……

269
0
SHARE

னக்கு போதுமான அளவு தாய்ப்பால் இல்லையென நினைக்கிறன். இதை அதிகப்படுத்த முடியுமா?
கண்டிப்பாக முடியும். நிறைய ஓய்வு எடுத்துக் கொண்டாலே உங்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதுதான் ஆலோசனை. பெரும்பாலான நேரங்களில் நீங்கள் படுக்கையில் படுத்து ஓய்வெடுக்க பாருங்கள்.

வீட்டு வேலைகளை எல்லாம் நீங்களே இழுத்துப்போட்டு செய்வதை விட வீட்டில் உள்ளவர்களை ஈடுபடுமாறு செய்யலாம். கணவரைச் செய்யச் சொல்லலாம். உங்கள் மாமியார், தாயார் இவர்கள் உதவி செய்யக்கூடும். இவ்வாறு செய்தல் குழந்தைக்கு பால் சுரப்பு நன்றாக இருக்கும். ஏன் இந்த சமயங்களில் நீங்கள் நன்றாக சாப்பிடுகிறீர்கள், நன்றாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்றால் குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

குழந்தைக்கு 48 மணி நேரங்களுக்குள் பால் நிறைய சுரக்கும். எப்போது என்றால் மேற்கூறியவாறு நீங்கள் ஊட்டச்சத்து, ஓய்வு, நிறைய திரவ உணவுகள் போன்றவற்றை பின்பற்றினால் நாடாகும். இப்படி செய்தும் உங்களுக்கு பால் சுரப்பது அதிகமாகாவிட்டால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here