Home Diabetes நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

683
0
SHARE

வாய்வழி மருந்துகளின் இணைப்புகள்
நீரிழிவு மருந்துகளின் குளுக்கோஸ் குறைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்காகவே அவை இணைத்துக் கொடுக்கப்படுகின்றன. பல வகையான மருந்துகளை இணைக்கும்போது அவை இருவேறு வழிகளில் இயங்கி ரத்த குளுகோஸைக் கட்டுப்படுத்துகின்றன. இருவேறு மருந்துகளை ஒரே சமயத்தில் இணைத்துக் கொடுப்பதே மிகப் பொதுவாக கடைபிடிக்கப்படுவதாகும். இரண்டு மருந்துகளை இணைத்து ஒரே மாத்திரையாககூடக் கொடுக்கப்படுகிறது.

சில மருத்துவர்கள் ஒரே சமயத்தில் மூன்றுவித மருந்துகளைக் கூடப் பரிந்துரைக்கக்கூடும். இவ்வாறு மூன்று மருந்துகளின் கூட்டு பற்றி மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எனினும் இரு கூட்டு மருந்துகள் பலன் அளிக்காத போது மூன்று மருந்துகள் கொடுக்கும் முறை பற்றி யோசிக்கலாம்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here