Home Common Health Problems ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 26

    ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 26

    413
    0
    SHARE

    மைக்ரேன் தலைவலி எனப்படுவது என்ன ?

    மைக்ரேன் தலைவலி என்பது ஒற்றை தலைவலியை குறிக்கிறது. மிகவும் லேசாக ஆரம்பித்து, சிறிது நேரத்தில் தாங்க முடியாத அளவுக்கு போகக்கூடியது இந்த தலைவலி, பொதுவாக இது கண்களில் தொடங்கி தலையில் பரவுகிறது . ஆரம்பத்தில், ஒற்றை தலைவலியாக ஒரு பக்கம் மட்டும் வலித்தாலும், பின்னர் இரு பக்கமும் வலிக்கக்கூடும். இந்த தலைவலியின் தொடர்ச்சியாக மூக்கில் நீர் சொட்டுதல், வாந்தி போன்றவை ஏற்படக்கூடும். இதனால் பாதிக்கப்படும் நபர்களில் மூன்றில் இருவர், தொடர்ந்து வேலை பார்க்கமுடியாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்படுவர். உடனடியாக ஓய்வு தேவைப்படும். படுத்தாலும் உறங்கமுடியாத நிலை உண்டாகும்.

    விளக்கு வெளிச்சத்தால் பாதிக்கப்படுவது. திடீரென வெளிச்சம் இல்லாமல் போவது, அதிக சத்தம் போன்றவை மைக்ரேன் தலைவலிக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. சாதாரணமான பணியில் உள்ளவர்களுக்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு ஒருமுறை வரலாம் அல்லது மாதம் ஒருமுறை வரை வரலாம். ஐ.டி. ஊழியர்களுக்கு, வாரம் ஒருமுறை இத்தகைய தலைவலி வரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் முறைப்படி சிகிச்சை எடுப்பது பற்றிய யோசனையின்றி, அதிகமாக காபி
    சாப்பிடுவது, சாக்லேட் சாப்பிடுவது என ஏதாவது ஒரு வகையில் கவனத்தை திசை திருப்பி வலியை குறைக்க நினைப்பார்கள். சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விடுவதால், இந்த தலைவலியே, பின்னாளில் பெரிய அளவில் மனசோர்வு உண்டாகவும் ஒரு காரணமாகிவிடுவது
    உண்டு.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here