Home Common Health Problems ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 30

    ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 30

    284
    0
    SHARE

    கேள்வி ?
    தலைவலி  வந்தவுடன்  மருத்துவரை  பார்க்க வேண்டுமா?


    பதில்
    அதிக  வலியுடன்  தொந்தரவு  கொடுக்கக்கூடியதாக  இருந்தாலும், தலைவலியை  அபாயகரமானது  என்று  சொல்ல முடியாது. தலைவலி  என்பது  வேறு  ஒரு நோயின்  அறிகுறிதான்  என்பதால் , அந்த  நோய்  என்ன  என்று  கண்டறிந்து  அதற்காக  ஏற்கெனவே  எடுத்துக்கொண்டிருக்கும்  சிகிச்சையை  தொடர்வது  அல்லது சிகிச்சையை  ஆரம்பிப்பது  போதுமானது . ஆனால் , அதற்காக  தலைவலி  வந்தால்  மருத்துவரை  பார்க்கவே  வேண்டியதில்லை  என்று  சொல்லவில்லை . கீழ்கண்ட  அறிகுறிகள்  தோன்றும்போது  மருத்துவரை  பார்ப்பது  அவசியம் .

    வழக்கத்தை விட அதிக  நேரம், வலி அதிகமாக  இருத்தல். எதிர்பாராமல்  திடீரென  தோன்றும்  தலைவலி , தலைவலியால்  தோன்றும்  குழப்பமான  மனநிலை . தலைவலி  காரணமாக  மூச்சுவிடுவதில்  சிரமம் . தலைவலி  காரணமாக  ஏற்படும்  வாந்தி , வயிற்று போக்கு, தலைவலி  காரணமாக  கண்  மற்றும்  காதில்  ஏற்படும்  பாதிப்பு . வழக்கமாக  எடுத்துக்கொள்ளும் சிகிச்சைக்கு  தலைவலி  கட்டுப்படாமல்  இருப்பது, தினமும்  குறிப்பிட்ட  நேரத்தில்  தலைவலி  வருவது . தலைவலி வரும் என்ற  பயம்  இருந்து  கொண்டே  இருப்பது. தலையில்  அடிபட்டதால் வலி
    உருவாவது. தலைவலி தூக்கத்தை  பாதிப்பதாகவும் , உணவை  உட்கொள்ள  முடியாத  நிலைக்கு  தள்ளுவதாகவும்  அமைவது. தலைவலி  காரணமாக  மயக்கம்  ஏற்பட்டால்  உடனே  மருத்துவரை  பார்த்து  சிகிச்சை  எடுத்துக்கொள்ள  வேண்டும் . ஐ.டி. ஊழியர்கள்  தொடர்ந்து  கம்ப்யூட்டரில்  வேலை  பராக் வேண்டி  இருப்பதால் , இது  போன்ற  நிலைகள் , அவர்களுக்கு  விரைவில்  பெரும் பாதிப்பை  ஏற்படுத்திவிடும் . எனவே , வழக்கத்துக்கு  மாறான  தலைவலி  வந்தாலே , உடனே  மருத்துவரை  பார்த்து  விடுவது  நல்லது.


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here