Home pregnancy  குழந்தை வளர்ப்பு 

 குழந்தை வளர்ப்பு 

271
0
SHARE

தாய்ப்பால் ஊட்டும்போது எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ?

நீங்கள் முழு தானிய உணவுகளை சாப்பிடலாம்.அதே சமயத்தில் உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இந்த உணவுகளால் ஒவ்வாமை இருந்திருந்தால் அவற்றை தவிர்ப்பது நல்லது.கடலை எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது.
சில குழந்தைகளுக்கு கடலை எண்ணையில் அலர்ஜி உண்டாகிவிடும்.சில பெண்கள் சிட்ரஸ் ப்ருட்,முட்டைகோஸ் போன்றவற்றை சாப்பிடுவார்கள்.சில வேளைகளில் குழந்தைகளுக்கு இது ஒத்துக் கொள்ளாது.அஜீரணக் கோளாறு ஏற்பட்டுவிடும்.தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருக்கும்.
நீங்கள் இத்தகைய ஒவ்வாத தன்மையுள்ள உணவுகளை சாப்பிடும் போது குழந்தைக்கு தொடர்ந்து எப்பமோ,வந்தியோ,மிக இலக்கமான மலமோ ஏற்படுவதுண்டு.சிட்ரஸ் அமிலமுள்ள பழச்சாறுகளால் கூட இவ்வாறு உண்டாக்கலாம்.அதனால் இந்த வகையான உணவுகளை தவிர்த்து உங்கள் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் இவற்றை தவிர்த்து விடுங்கள்.

நான் தாய்ப்பால் கொடுக்கிற காலத்தில் எவ்வளவு திரவத்தை அருந்துவது?
உங்களுக்கு எதுவரை குடிக்க முடியுமோ அந்தளவுக்கு குடிக்கலாம்.தாகமாக இருக்கும் பட்சத்தில் குடிக்கலாம்.உணவுக்கு முன்பு குடிப்பது நல்லது அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பாக ஏதேனும் ஒரு திரவ உணவு சாப்பிடுவது நல்லது.அதே நேரத்தில் அவர்களுக்கு தாகம் எடுக்காத போது இவற்றை அருந்த வேண்டாம்.நிறைய தண்ணிர் அருந்துவதாலோ,திரவ உணவு அருந்துவதாலோ,அதிகமான பால் சுரந்து விடுவதில்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here