Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 62

கரு முதல் குழந்தை வரை – பாகம் 62

210
0
SHARE

கரு முதல் குழந்தை வரை

கேள்வி ?

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் இருந்தால் , அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் ? இந்த பிரச்சனை பிரசவத்திற்கு பிறகும் தொடர வாய்ப்பு உண்டா ? கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏன் அதிகரிக்கிறது ? இதை தடுக்க என்ன செய்யலாம் ?

பதில்
சுமார் ஐநூறில் ஒரு பெண்ணுக்கு நீரிழிவு நோய் இருப்பது வழக்கம் . கர்ப்ப காலத்தில்
ஐநூறில் இருவருக்கு இந்த நோய் வரும் . இதனால்தான் , முன்னதாகவே நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தாவிட்டால் குழந்தை கருப்பையிலியே இறந்துவிடும் அல்லது பிறந்து இறந்து போகும்.. உயிருடன் பிறந்தால் குறைபாட்டுடன் பிறக்க 80 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.

கர்ப்ப காலத்தில் வரும் நீரிழிவு, பிரசவத்துக்கு பிறகு மறைந்து விடும். இவர்களில் பத்து சதவீதத்தினருக்கு பிரசவத்துக்கு பிறகு பத்தாண்டுகளில் நீரிழிவு மீண்டும் தோன்றும் . நாற்பது சதவீதத்தினருக்கு இருபதாண்டுகளில் நீரிழிவு வரும் .

ரத்த சர்க்கரை அளவு அதிகமாவது , ரத்த அழுத்தம் அதிகரிப்பது ஆகிய காரணங்களால் கர்ப்ப காலத்தில் நீரிழிவு தோன்றுகிறது . கருவுற்ற பன்னிரண்டாவது வாரத்திலேயே பரிசோதனை செய்து குழந்தை ஆரோக்கியமாக வளருகிறதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். உணவு
கட்டுப்பாடு மிகை ரத்த அழுத்த கட்டுபாடு ஆகியவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் .
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here