Home pregnancy குழந்தைப் பெரு……

குழந்தைப் பெரு……

238
0
SHARE

சில வேளைகளில், எண்ணற்ற பெரிய கருவனுக் கூடுகள் இருப்பதால், நிறைய ஈஸ்ட்ரோஜென் சுரந்திருக்கும். எஸ்.சி.ஜி. ஊசியை நிறுத்தி அந்த சிகிச்சையைத் தள்ளிப்போட வேண்டும். இல்லாவிட்டால், ஆபத்தான நிலை உண்டாகும். சிகிச்சை பெறுபவர்களின் வசதியைக் கருதி, முட்டையைத் தூண்டும் சிகிச்சை, சளிச் சுரப்பை இயல்பாக்கும், சிகிச்சை, செயற்கை முறை விந்தேற்றம் என அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளவேண்டி இருக்கும்.

மருந்துகளின் பக்கவிளைவாக சினைப்பை வீக்கம், வயிற்றில் வலி போன்ற தொல்லைகள் வரலாம். அடுத்த மாதவிலக்கின் போது, சினைப்பைகள் இயல்பு நிலைக்கு வந்துவிடும். சினைப்பைகள் மிக அதிகமாகத் தூண்டப்பட்டால், அதில் கட்டிகள் தோன்றக்கூடும். ரத்தக் கசிவும் ஏற்படலாம். இவை போன்ற பல பிரச்சனைகளைச் சமாளிப்பதற்காக, மருத்துவரின் ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான், கரு முட்டையை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here