Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 64

கரு முதல் குழந்தை வரை – பாகம் 64

271
0
SHARE

​கரு முதல் குழந்தை வரை

ர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமாகி எனது தங்கை இறந்து போய்விட்டாள் . கர்ப்ப காலத்தில் தோன்றும் ரத்த அழுத்தம் அவ்வளவு கொடியதா ? இது என் வருகிறது ?

இன்றைய அளவில்கூட கர்ப்பிணியின் மரணத்துக்கும் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் மரணத்துக்கும் முக்கிய காரணமாக விளங்கும் நோய்களுள் மிகை ரத்த அழுத்தம் முதன்மை வகிக்கிறது எனலாம் .

சாதாரணமாக , ரத்த அழுத்தத்தில் சுருங்கு ரத்த அழுத்தம் 120 மி.மீ ஆகவும் , விரிவு ரத்த அழுத்தம் 80 ம்.மீ ஆகவும்தான் இருக்கும் . முதல் ஆறு மாத கர்ப்ப காலத்தில் , ரத்த அழுத்தம் சற்று குறைந்து காணப்படும் . சுருங்கு ரத்த அழுத்தம் நூறாகவும் , விரிவு ரத்த அழுத்தம் எழுபதாகவும் இருக்க கூடும் . கடைசி மூன்று மாத காலத்தில் தான் ரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும் . இருபத்து நான்காவது வாரத்துக்கு பிறகுதான் ரத்த அழுத்தம் அதிகமாக ஆரம்பிக்கிறது .

விரிவு ரத்த அழுத்தம் 130 ம்.மீட்டரை தாண்டினால் அதை இதயத்தால் தாங்க இயலாது . மூளையில் ரத்த கசிவு போன்றவை ஏற்படும் .

கர்ப்ப காலத்தில் விரிவு அழுத்தம் 110 அல்லது 120 ஆக இருக்கும்போதே இதய பிரச்சனை மற்றும் மூளை ரத்த கசிவு ஏற்ப்பட்டுவிடுகிறது. கர்ப்ப சன்னி என்ற பிரச்சனை விரிவு அழுத்தம் 90 மி. மீட்டர் அல்லது 100 மி மீட்டர் இருக்கும்போது வந்துவிடுகிறது . இந்த ரத்த அழுத்தம் ஏன் வருகிறது என்றால், பாரம்பரியம் , வறுமையான சூழ்நிலை சிறுநீரக பிரச்சனைகள்,
பனிநீர் மிகைப்பு , இரட்டை கோளாறுகள் , எப்போதும் டென்க்ஷன் கவலை போன்ற காரணங்களால் வருகிறது .

கருத்தரிக்கும் முன்போ அல்லது கர்ப்ப காலத்திலோ ரத்த அழுத்தம் இருந்திருந்தால் அது தாயையும் , கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கும் . கர்ப்ப சன்னி, கர்ப்பிணி மரணமடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் . திடீரென தலை சுற்றல் , பார்வை மங்காகி பின் இருண்டது போன்றிருத்தல் ஆகியவை நேரிடும் .

இதை தவிர்க்க , கர்ப்பிணிக்கு பூரண ஓய்வு , தூக்க மருந்துகள் , ரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவர்கள் பரிந்துரை செய்து தாய் – சேய் இருவரையும் காப்பாற்றுவார்கள்.

ரத்த அழுத்த பரிசோதனையை ஆரம்பத்திலேயே தவறாமல் மேற்கொள்ள வேண்டும் . பிரசவ காலத்திற்கு பின்னரும் ரத்த அழுத்த பரிசோதனையை மேற்கொண்டால்தான் நோய் தொடருகிறதா என்பதை கண்டறிய இயலும் .

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here