Home pregnancy கர்பிணிப் பெண்களுக்கான உணவும் – உணவு முறைகளும் – பாகம் 1

கர்பிணிப் பெண்களுக்கான உணவும் – உணவு முறைகளும் – பாகம் 1

173
0
SHARE

கர்பத்துக்குத் தயாராதல்: பாகம் 1

பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தாய் ஆக வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். அதுவும், பிரசவத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல், நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும். தான் “அம்மா” என்று கூப்பிடப்பட வேண்டும் என்று நினைப்பாள். ஆணாக இருந்தால் தான் “அப்பா” என்று கூப்பிடப்பட வேண்டும் என்று நினைப்பார்.

இது, ஏதோ ஒரு சில பெண்களுடைய எதிர்பார்ப்பு கிடையாது. ஆனால், துரதிஷ்டவசமாகச் சில பெண்களால் “அம்மா” ஆக முடிவதில்லை. அதற்கு அவர்களுடைய உடல் நிலை, பரம்பரைக் காரணங்கள், நாள்பட்ட நோய்கள், சத்துப் பற்றாக்குறை போன்றவை காரணங்களாக இருக்கலாம்.

இருப்பினும், தவிர்க்கப்படக்கூடிய, தீர்க்கக்கூடிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்குத் தகுந்த மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் பெறலாம்.

அந்த வகையில், உணவு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, அந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு குழந்தை பெறக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் எளிய வழிமுறைகளை இனி வரும் பாகங்களில் காணலாம்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here