Home Diabetes சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 119

சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் செக்ஸ் பிரச்சனைகள் – பாகம் 119

231
0
SHARE

விரைப்புத் தன்மையற்ற நிலையை உணர்த்துதல்:

விறைப்புத்தன்மையற்ற நிலையை எரக்டல் டிஸ்பங்க்ஷன் என ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். பாலுறவுச் செயற்பாட்டில் ஈடுபடுவற்கான விரைப்புத் தன்மையை அடைய முடியாத நிலை அல்லது விரைப்புத் தன்மையை தக்க வைத்துக் கொள்ள இயலாத நிலையைத்தான் விறைப்புத் தன்மையற்ற நிலை என்கிறோம். இதை நோயாளிக்கு உணர்த்த வேண்டும்,

சர்க்கரை நோயின் இரண்டு வகைகளிலும் சுமார் 50 விழுக்காடு பேர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சர்க்கரை நோயினால் அட்டானமிக் நரம்புகள் எனப்படும் பரிவு நரம்புமண்டலம் பாதிக்கப்படுகிறது. சிரை நாளங்கள் சிதைந்து போகின்றன. செல்கள் சேதமுறுகின்றன. இவையனைத்தும் ஆணுறுப்பில் நேரும் போது ஆண்மைக்குறைவு அதாவது விரைப்புத் தன்மையற்ற நிலை உண்டாகிறது.

மிகை இரத்த அழுத்தம் உள்ள நபர்கள், அதிக கொழுப்பு உள்ள நபர்கள், இவை இரண்டுமே ஒன்றாக உள்ளவர்கள் போன்றவர்களுக்கு ஆண்மைக்குறைவு பிரச்சினை வருகிறது. ஆண்மைக்குறைவு மட்டுமின்றி பாலுறவின் போது விந்தை வெளியேற்றுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

ஒரு நபருக்கு விறைப்புத்தன்மை இல்லாதிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

குடும்ப நல மருத்துவர் அல்லது பாலியல் நிபுணரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் அனைவரும் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கக்கூடுமா என்பதை அறிந்துகொள்வற்கு பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

பாலுறவுத்திறன் இல்லாவிட்டாலும் கூட இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம்.

ஆண்மைக்குறைவு உள்ள சர்க்கரை நோயாளிகள் வேறு ஏதேனும் காரணங்கள், சிகிச்சைக்கு கட்டுப்படக்கூட காரணங்கள் உள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். உடலியல் கரணங்கள் தவிர உளவியல் காரணங்களும் இதில் அதிக பங்கு வகிப்பதால் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தம்பதியரிடையே உள்ள இணக்கத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஆண்மைகுறைபாடு ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சினைகளையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

– ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here