Home Common Health Problems ஆரோக்கிய வாழ்வுக்கு எளிமையான 15 வழிகள் :

    ஆரோக்கிய வாழ்வுக்கு எளிமையான 15 வழிகள் :

    288
    0
    SHARE

    9) படுக்கையில் விழுந்ததும் எத்தனை நிமிடங்களில் தூங்கப் போகிறீர்கள் ?. ஐந்து நிமிடங்களுக்குள் தூங்கி விடுவீர்கள் என்றால் உங்களுக்கு தூக்கம் போதவில்லை என அர்த்தம். அதிக உடல் பருமன், டைப் 2 சர்க்கரை நோய் , அதிக இரத்த அழுத்தம் போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம். வழக்கத்தை விடவும் அதிகமாக தூங்கிப் பாருங்கள். அப்போதும் இந்த பிரச்சினை சரியாகவில்லை என்றல் மருத்துவ ஆலோசனை அவசியம்.

    10) கொஞ்சமாக சாப்பிட்டாலும் உடனே வயிறும், உடலும் உப்பிக் கொள்கிற மாதிரி உணர்கிறீர்களா ? 2 வாரங்களுக்கும் மேலாக இப்படி உணர்ந்தீர்களானால் மருத்துவப் பரிசோதனை முக்கியம். கர்ப்பவாய் புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறி மிகவும் சகஜமாக காணப்படுவதாகவும், ஆனாலும் பல பெண்களும் இதை அலட்சியப்படுத்துவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே வயிறு மற்றும் உடல் உப்புசத்தை வாயுக்கோளாறு என நீங்களாகவே நினைத்துக் கொண்டு அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது .

    11) சுவாரஸ்யமான இந்த சோதனை உங்கள் புத்தியைக் கூர்மையாக்கும். உங்கள்முன் உள்ள 5 பொருட்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 4 நிறங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 3 உணர்வுகளை (குளிர், வெப்பம் மாதிரி) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 2 ஒலிகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சூழலில் உள்ள ஒரு வாசனையை நினைவில் கொள்ளுங்கள். இப்படி ஐம்புலன்களுடன் கட்டுப்பாட்டில் இருப்பதென்பது ஒருவகையான மனப்பயிற்சி என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். உண்மையாகவே பசிக்கிறதா என்பதில் தொடங்கி உங்கள் உணர்வுகளை சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட இந்த சுயபரிசோதனை உங்களுக்கு உதவும். அடிக்கடி செய்து பார்க்கலாம்.

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here