Home Common Health Problems ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 34

    ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 34

    247
    0
    SHARE

    எம்.எஸ்.டி பாதிப்பை மூன்று வகையாக பார்க்கலாம்.

    ஆரம்பகால வலிகள்

    இதை ஆங்கிலத்தில் ரெபிடேடிவ் ஸ்ட்ரெய்ன் இஞ்சூரி என்பார்கள் . உடலில் இருக்கும் மிகவும் மிருதுவான நரம்புகள் பாதிப்படைவதை இது குறிக்கும் . அதிகமாக கம்ப்யூட்டரை பயன்படுத்துவதால் கழுத்து , தலை காய் மற்றும் கண்களில் உள்ள நரம்புகள் பாதிப்படைந்து வலி மெதுவாக ஆரம்பிக்கும் . ஆரம்ப கட்டத்தில், மணிக்கட்டு , உள்ளங்கை , கழுத்து , தோள்பட்டை மற்றும் முதுகுபுறத்தில் வலி ஏற்பட கூடும் . இது காயம் ஏற்படும் முன்னர் உண்டாகும் வலி மற்றும் செயல்பட முடியாத நிலையை குறிக்கும் .

    அதிகமான நேரம் கம்ப்யூட்டர் மவுஸை கையாள்பவர்களுக்கு கைகளை அசைக்க முடியாத நிலை அல்லது உடனடியாக செயல்பட முடியாத சூழல் உண்டாகும். நீண்ட நேரம் உள்ளங்கை கீழ்ப்பகுதியை வைத்து அழுத்தி கொண்டிருப்பதால் , அந்த பகுதி நரம்புகள் சேதமடைந்து ரத்தம் செல்வது குறைந்து வலி உண்டாகிறது .
    இதனால் கைகள் , முழங்கை , தோள்பட்டை , கழுத்து , முதுகுப்புறமும் வலி பரவக்கூடும் . பட்டன்களை வேகமாக அழுத்த வேண்டும் என நினைத்தால் கூட கைவிரல்கள் வேகமாக வேலை செய்யாது .

    மேலும் , கைகளில் வலி இருப்பது தெரியும் . ஆனால் எந்த இடத்தில் வலி இருக்கிறது என்பதை தெளிவாக கண்டறிவது கடினமாக இருக்கும் . பொதுவாக, கையில் வலி இருந்தால் , அது கம்ப்யூட்டரால் ஏற்பட்டது என்று நம்புவதற்கு கடினமாக இருக்கும் . ஆனால் ,
    ஆரம்பத்திலேயே உணர்ந்து விட்டால் பெரிய சிக்கல்களை தவிர்த்துவிடலாம் .


    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here