Home pregnancy கரு முதல் குழந்தை வரை – பாகம் 65

கரு முதல் குழந்தை வரை – பாகம் 65

216
0
SHARE

கரு முதல் குழந்தை வரை

கேள்வி ?

எனக்கு தெரிந்தவரின் மனைவி , கர்ப்ப சன்னி நோயால் இறந்து விட்டார் . இது எவ்வாறு ஏற்படுகிறது ? இதை தவிர்க்க என்ன வழி ?

பதில்

கர்ப்ப சன்னி என்பது பிரசவ கால வலிப்பு நோயாகும். நான்கு நிலையாக இது தோன்றும். முதலில், கண்பார்வை மங்குதல், நெஞ்சு வலி
, கண்களை உருட்டுதல் , முகம் மற்றும் கைகளில் தசை வெட்டி இழுத்தல் ஆகியவை ஏற்பட்டு சில நிமிடங்கள் நீடிக்கும்.

இரண்டாவது நிலையின்போது நினைவு இழப்பு , தசைகள் சுருங்குதல் , ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்ஸைடு அதிகரிப்பதால் மூச்சுத்திணறல் , உடலில் நீலம் பாரிப்பது ஆகியவை ஏற்படும் .

மூன்றாவது நிலையில் ,தசை நார்கள் மாறி மாறி சுருங்கி விரியும் . இந்நிலையில் நாக்கை கடித்து கொண்டு வெட்டி வெட்டி இழுத்து கொள்வார்கள் . வாந்தி, மூச்சு குழாய்குள் வாந்தி செல்லுதல் ஆகியவை ஏற்படும் .

நான்காவது நிலையில், கர்ப்பிணிக்கு கோமா நிலை வந்துவிடும் . மூளையில் ரத்த கசிவு , நஞ்சு பிரிந்து வெளியேறுதல் , சிறுநீர் சரியாக பிரியாமை போன்றவை உண்டாகும் . கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜன் செல்வது தடைபடும் .

இத்தகைய நிலைகள் தொடர்ந்தால் , கர்ப்பிணி நிச்சயமாக உயிரிழக்க நேரிடும் . இதை தவிர்க்க அவசர கால மருத்துவர் சிகிச்சை அவசியம் .

மருத்துவ சிகிச்சையின்போது வலிப்பு வந்துவிட்டால் , மூச்சுத்திணறல் ,திடீர் காய்ச்சல் , மூளையில் ரத்த சசிவு , இதயம் செய்லபட முடியாத நிலை போன்றவையும் தோன்றி ஆபத்தை தரும் . கவனமாக சிகிச்சை மேற்கொண்டால் கர்ப்பிணியை காப்பாற்றலாம்.

Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here