Home pregnancy குழந்தை பேரு

குழந்தை பேரு

233
0
SHARE

சில கருவாக்கத் தடைகள் :
கணவருடைய ரிப்போட்டைப் பார்த்தபோது,அதில் போதுமான எண்ணிக்கையில் உயிரணுக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.ஆனால்,அவரால் தன் மனைவியை கருத்தரிக்க செய்ய முடியவில்லை.ஏன்?
கருப்பையை பரிசோதிப்பதற்கு முன்,அந்தப் பெண்ணின் கருப்பை சளிச் சுரப்பையும்,கணவரின் விந்து திரவத்தையும் பரிசோதித்து விடலாம் என்று முடிவு செய்து,அவற்றைப் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பினேன்.

அவர்களுக்கு ,மருந்து மாத்திரை கொடுத்து நான்கு நாட்கள் கழித்துவந்து பார்க்கச்சொல்லி அனுப்பிவைத்தேன்.ஆய்வக பரிசோதனை முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.பெண்ணின் சளிச் சுரப்பில் கணவரின் உயிரணுக்களைக் கலந்த போது,அவை உடனே சுருண்டு விழுந்து இறந்துபோவதற்காகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர்கள் இருவரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை கல்சர் செய்து ,தானமாகப் பெற்று வைத்திருந்த இன்னொருவரின் உயிரணுக்களை அந்தப் பெண்ணின் சளி சுரப்போடு சேர்த்து பார்த்தபோது,அவை நன்றாக அதில் நீந்திக் கொண்டிருந்தன.இவ்வாறே,அந்த நபரின் உயிரணுக்களை இன்னொரு பெண்ணின் சளி திரவத்தில் சுரந்த போது,அவையும் உயிருடன் இருந்தன.
Dr Jeyarani
– ஆசிரியர் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here