Home Common Health Problems ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 35

    ஐ.டி. துறை பிரச்சனைகளும் தீர்வுகளும் – பாகம் 35

    620
    0
    SHARE
    619-06774815 © Masterfile Royalty-Free Model Release: Yes Property Release: No Businessman relaxing at desk in office

    வலி காயமாக மாறுதல்

    திக வலி மற்றும் வேதனை நிலையை அடையும் முன்னர் , அதை கண்டறிந்து விட்டால் உடனே சிகிச்சையை தொடங்க முடியும் . எனவே , சி .டி. எஸ் பாதிப்புக்கான அறிகுறிகளை முதலில் தெரிந்து கொள்ளலாம் .

    தூக்கத்தின் போது கை விரல் மற்றும் உள்ளங்கை வலி காரணமாக விழிப்பு உண்டாகும் .

    கழுத்து தோள்பட்டை மற்றும் கைகளில் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் அசவுகரியம்
    தொடர்ந்து இருக்கும் .

    வேலை பார்க்காத சமயங்களிலும் உள்ளங்கைகளில் வலி மற்றும் சோர்வை உணர முடியும் .
    ரத்த ஓட்டம் குறைவதன் காரணமாக அடிக்கடி கைகள் மரத்து போகும் .

    கைகள் அதிகமாக குளிர்ந்து , சில சமயங்களில் கைகளில் விரல்களே இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும் .

    சிறிய பொருள்களை கூட பிடிக்க முடியாமல் தவற விட நேரிடும் . கைகளில் தடுமாற்றம் இருக்கும் .
    ஐ.டி. ஊழியர்களில் , குறிப்பாக சர்க்கரை நோய் , ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கபட்டுள்ள நோயாளிகள் , சி .டி. எஸ் தாக்குதலுக்கு சுலபமாக ஆளாகிறார்கள் .

    பெண் ஊழியர்களை விட ஆண்களே இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் அதற்கான காரணம் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. சி.டி. எஸ் பாதிப்பை உடனடியாக கண்டறிந்து நரம்புகளில் இருக்கும் இறுக்கத்தை அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் சரி செய்யலாம். இல்லையெனில் , ,பக்கவாத பாதிப்பு முதல் மனநிலை தடுமாறுதல் வரை பல வகையான பிரச்சனைகள் உருவாகி விடலாம். பாதிப்பு தீவிரமாகும் நிலையில் உயிரிழப்பு கூட ஏற்படலாம் .

    பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போதே , மணிக்கட்டு , கழுத்து , தோள்பட்டை, முன்னங்கை , விரல்கள் மற்றும் உள்ளங்கைகளுக்கு என்று தனித்தனியாக பயிற்சி செய்வதன் மூலம் இப்பிரச்சனை வருவதை தடுக்கவும் முடியும் .

    – ஆசிரியர் டாக்டர் டி.காமராஜ்

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here